Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயகாந்த் முதல் நல்லக்கண்ணு வரை.. சட்டசபை தேர்தலில் மிஸ்ஸாகும் முக்கிய தலைவர்கள்.. லிஸ்ட்டை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கும், இந்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலுக்கும் இடையே பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் எந்தெந்த தலைவர்கள் மிஸ்ஸாகி உள்ளனர்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஒரே கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 4ல் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

tamil nadu assembly election

அதன்படி பார்த்தால் சரியாக இன்னும் ஒருமாதம் மட்டுமே தேர்தலுக்கு உள்ளது. அடுத்த மாதம் இவ்வளவு நேரம் தேர்தல் முடிந்து இருக்கும். இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தொகுதி பங்கீட்டை விரைந்து முடித்து தீவிர பிரசாரத்தை தொடங்க உள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க கடந்த 2021 சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போது இந்த சட்டசபை தேர்தலில் பல முக்கிய தலைவர்கள் மிஸ் செய்கின்றனர். இது அந்தந்த கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றி இங்கு பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலில் பார்ப்பது விஜயகாந்த்.

விஜயகாந்த்

தேமுதிக நிறுவன தலைவரான இவர் கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது உடல்நல பிரச்சனையால் ஆக்டிவ் பாலிட்டிக்ஸில் இல்லாமல் இருந்தாலும் தேமுதிக தலைவராக தொடர்ந்தார். அந்த தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. பிரசாரங்களின்போது விஜயகாந்தின் பெயரும், போட்டோக்களும் பயன்படுத்தப்பட்டது. தற்போது விஜயகாந்த் காலமாகிவிட்டார். தேமுதிகவை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் வழிநடத்தி வரும் நிலையில் திமுக கூட்டணியில் இணைந்துள்ளார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தமிழக தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அவர் காலமான நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 2023 இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அதன்பிறகு ஈவிகேஎஸ் இளங்கோவனும் கடந்த 2024 இறுதியில் காலமானார்.

என் சங்கரய்யா

மார்க்சிஸ்ட் ம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரராகவும் இருந்தவர் என் சங்கரய்யா. மதுரை மேற்கு, மதுரை கிழக்கு தொகுதிகளின் முன்னாள் எம்எல்ஏவான இவர் கடந்த 2021 தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு வழிக்காட்டினார். இவர் கடந்த 2023ம் ஆண்டில் தனது 102வது வயதில் காலமானார்.

நல்லக்கண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவராக இருந்தவர் ஆர் நல்லக்கண்ணு. இவர் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. இருப்பினும் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பான கூட்டணி முடிவுகள், பிரசாரங்களுக்கு வழிக்காட்டுதல் செய்தார். கடந்த மாதம் அவர் தனது 101வது வயதில் காலமானார்.

கட்சி - கூட்டணி மாறிய தலைவர்கள்

இதுதவிர இன்னும் சில முக்கிய தலைவர்களின் தங்களின் கட்சி மற்றும் கூட்டணியை மாற்றி உள்ளன. அதன்படி கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த ஓ பன்னீர் செல்வம் தேனி மாவட்டம் போடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு ஒற்றை தலைமை விவகாரம் எழுந்த நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சட்டப்போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து திமுகவில் இணைந்துள்ளார்.

அதேபோல் டிடிவி தினகரன் கடந்த முறை தனியாக கூட்டணி அமைத்து களமிறங்கிய நிலையில் இந்த முறை அதிமுக - பாஜக கூட்டணியில் ஐக்கியமாகி உள்ளார். மேலும் கடந்த முறை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் - சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் கமல்ஹாசன் தற்போது திமுக கூட்டணியில் உள்ளார். சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்து அந்த கட்சியில் செயல்பட்டு வருகிறார்.

புது வரவுகள்

இதுதவிர கடந்த 2021 சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கவில்லை. இப்போது அவர் கட்சி தொடங்கி உள்ளதால் முதல் முறையாக சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துகிறார். அதேபோல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+