Kantara Chapter 1: காந்தாராவில் காட்டப்பட்ட இட்லி பூ! மன்னர்கள் பயன்படுத்திய பூவின் சிறப்புகள் என்ன?
சென்னை: காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தில் மலைவாழ் மக்கள் அவர்களது தெய்வத்திற்கு பூஜிப்பதற்காகவும் இறந்தவர்கள் மீது வைப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்ட இட்லி பூ குறித்து பார்க்கலாம். இந்த பூவை கையில் வைத்துக் கொண்டு காந்தாராவை வேண்டும் போது அதற்கு மந்திரவாதி கட்டு போட்டதால் அந்த பூ பஸ்பமாகிவிடுகிறது.

காந்தாரா படம் எடுத்த ரிஷப் ஷெட்டி, காந்தாரா சாப்டர் 1 என்ற படத்தை எடுத்து கடந்த அக்டோபர் 2ஆம் தேதி வெளியிட்டார். இது தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் ஆதரவை பெற்று வருகிறது.
இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ளார். கதை, திரைக்கதை எழுதி நடித்தவர் ரிஷப் ஷெட்டி. அதாவது பாங்ரா தேசத்து ராஜா, காந்தாரா எனும் பழங்குடியினர் வாழும் காட்டுப் பகுதியை அழிக்க நினைக்கிறார். ஆனால் தெய்வீக சக்தியின் உதவியுடன் ராஜாவின் படைகளை ஓட ஓட விரட்டியடிக்கிறார்கள் காந்தாரா மக்கள்.
ராஜா வாரிசுகள்
இதைத் தொடர்ந்து அந்த ராஜாவின் வாரிசுகளான ஜெயராம், ருக்மணி வசந்த், குல்சன் தேவய்யா ஆகியோர் அந்த தெய்வீக சக்தியை கட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். அதை ரிஷப் ஷெட்டி எப்படி தடுக்கிறார் என்பதுதான் கதை.
ரிஷப் ஷெட்டி
ரிஷப் ஷெட்டியின் நடிப்பு நன்றாக இருக்கிறது. காந்தாரா தெய்வத்தை அழகாக காட்டியிருக்கிறார்கள். ஆனால் முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பும் கதையம்சமும் இரண்டாவது பாகத்தில் இல்லை என்கிறார்கள். அதிலும் சக்தி வந்தவுடன் ரிஷப் ஷெட்டி ஆடும் ஆட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது. கிளைமாக்ஸில் ருக்மணி வில்லியாக மாறுகிறார்.
பழங்குடியின மக்கள்
இந்த படத்தில் அந்த பழங்குடியின மக்கள், தங்கள் தெய்வதற்கு சிவப்பு நிறத்தில் இருக்கும் இட்லி பூவை வைத்து வழிபடுகிறார்கள். அது போல் இறந்த ரிஷப் ஷெட்டியின் உடலிலும் அந்த பூ வைக்கப்படுகிறது.
தேவாங்கு
ஒரு கட்டத்தில் தெய்வதற்கு தேவாங்கு டீம் உதவியுடன் ஜெயராமும் அவரது மகள் ருக்மணியும் கட்டுப் போடுகிறார்கள். இது ரிஷப் ஷெட்டியின் இறந்த அம்மா மூலம் அவருக்கு தெரிவிக்கப்படுகிறது. இது உண்மையா என அறிய பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் தனது கைகளில் இட்லி பூவை வைத்து சுவாமி கும்பிட்டு விட்டு கைகளை திறந்து பார்க்கிறார், அப்போது அந்த பூ வெம்பி போகிறது. இது போல் அந்த காந்தாரா மக்களுக்கு கஷ்டம் வரும் போதெல்லாம் அந்த பூ வெம்பி போகிறது.
இட்லி பூ
இந்த பூ இட்லி பூ என்பார்கள். இதை ஏன் காந்தாராவில் காட்டினார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த பூ பார்ப்பதற்கு முல்லை பூ போல் சிவப்பு நிறத்தில் இருக்கும். இது ஒரு கொத்தாக பூக்கும். பார்ப்பதற்கு இட்லி போல் இருக்கும். இதனால் இதன் பெயர் இட்லி பூ என அழைக்கப்படுகிறது.
வெட்சி பூ
ஆனால் இதன் உண்மையான பெயர் வெட்சி பூ. இது குல்லை, செச்சை, செங்கொடுவேரி, சேதாரம் போன்ற பல சங்க கால பெயர்களால் அறியப்படுகிறது. இதன் பெயர் ருக்மணி என்றும் அழைக்கிறார்கள்.
காற்று மாசை தடுக்கும்
இது உலகின் வெப்ப மண்டல நாடுகளில் காணப்படுகிறது. நல்ல சூரிய ஒளி இருந்தால் மட்டுமே பூக்கும் பூ இது. ஒரு கொத்தில் 50 முதல் 60-க்கும் மேற்பட்ட மலர்கள் இருக்கும். இது வீட்டில் வளர்க்கும் போது வீட்டைச் சுற்றி இருக்கும் மாசுபட்ட காற்றை சுத்தம் செய்து நல்லக் காற்றை சுவாசிக்க நமக்கு உதவுகிறது.
வெற்றி
அந்த காலங்களில் மன்னர்கள் போருக்கு செல்லும் போது இந்த பூவை சூடிக் கொண்டு செல்வார்களாம். இந்த பூவை வைத்துக் கொண்டு சென்றால் கட்டாயம் வெற்றி கிடைக்கும். பூவை வீட்டில் வைத்து வளர்த்தால் வெற்றி தானாக வருமாம். வாசலில் இந்த பூவை வளர்த்தால் மகாலட்சுமியே வாசம் செய்வது போல் இதை அதிர்ஷ்ட பூ என்கிறார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோயில்
இந்த பூ திருப்பதி ஏழுமலையானுக்கு சாத்தப்படுகிறதாம். இந்த பூ, வேர், இலை என அனைத்தும் மருத்துவ குணங்களை கொண்டதாம். சொரியாசிஸ், ஆஸ்துமா, நீரிழிவு, அல்சைமர், அல்சர், பசியின்மை, ரத்தத்தை சுத்தப்படுத்த என இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications