வந்துவிட்டது ஒரே நாடு, ஒரே கார்டு! இனி எல்லா சேவைக்கும் ஒரே கார்டு.. என்ன இது? எப்படி பயன்படுத்துவது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா முழுக்க 'ஒரே நாடு , ஒரே கார்டு' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு (என்.சி.எம்.சி) பயன்பாட்டிற்கு வர உள்ளது.

பேருந்து தொடங்கி மெட்ரோ வரையிலான பயணக் கட்டணம், டோல் டாக்ஸ், பார்க்கிங் கட்டணம். ஆகியவற்றை ஒரே கார்டு மூலம் செலுத்த உதவுகிறது. அதாவது அனைத்து சேவைகளுக்கும் ஒரே கார்டு மூலம் கட்டணம் செலுத்தும் நடைமுறையை கொண்டு வர இந்த நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு (என்.சி.எம்.சி) பயன்பாட்டிற்கு வர உள்ளது.

The National Common Mobility Card NCMC rules eased by RBI to attract more users

பல வகையான பொதுப் போக்குவரத்திற்கு பணம் செலுத்துவதற்கும், பணத்தை திரும்பப் பெறுவதற்கும் மற்ற கட்டணங்களை செலுத்துவதற்கும் ஒரே அட்டையைப் பயன்படுத்த முடியும். பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் பிற வங்கிகள் உட்பட 25+ பார்ட்னர் வங்கிகளிடமிருந்து டெபிட்/கிரெடிட்/ப்ரீபெய்ட் ரூபே கார்டுகளாகவும் இந்த மொபிலிட்டி கார்டு கிடைக்கும்.

3000 ரூபாய் வரை இதில் எந்த கேஒய்சியும் இல்லாமல் பயன்படுத்த முடியும் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது. அதாவது கேஒய்சி இல்லாமல் 3000 வரை இதில் ரீசார்ஜ் செய்து பயன்படுத்த முடியும். நாட்டிலுள்ள பல பொதுப் போக்குவரத்து அமைப்புகளில் தடையற்ற டிஜிட்டல் சேவைகளை வழங்கும் தேசிய பொது இயக்க அட்டை (NCMC), 2019லேயே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.

ஆனால் இதை பெரிய அளவில் மக்கள் பயன்படுத்துவது இல்லை. அதனால் இப்போது இதன் விதிகளில் தளர்வுகளை அரசு கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாட்டிலும் வருது:
சென்னை; சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக தனியாக செயலி உருவாக்க டெண்டர் கோரியது சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம்.

QR கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி முதல் கட்டமாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கு மார்ச் முதல் வாரத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை கொண்டு வரப்பட உள்ளது. வரும் நாட்களில் மற்ற நகரங்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.

2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சென்னையில் உள்ள பேருந்துகளில் எல்லாம் பயணிகள் தகவல் அமைப்பு வழங்கப்படும். அதாவது பேருந்துகளில் தானியங்கி மூலம் எந்த நிறுத்தம் என்ற அறிவிப்பு வெளியிடப்படும். இது போக உலக வங்கி மற்றும் ஜேர்மன் வங்கியான KfW ஆகியவற்றிலிருந்து நிதியுதவியுடன் 1,500 மின்சார பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாக இயக்குனர் கூறுகிறார்.

சென்னை மாநகர மதிப்பீட்டின்படி, சென்னை மாநகரப் போக்குவரத்து அமைப்புக்கு மொத்தம் 5,000 பேருந்துகள் தேவைப்படுவதாகவும், இதனால் பேருந்துகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாகவும் MTC நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதிய டிக்கெட் முறை: இது போக மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மார்ச் முதல் வாரத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறையை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி-எம்) 'சென்னை நகரத்தின் எளிமை' என்ற அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்டிசி நிர்வாக இயக்குநர் ஆல்பி ஜான் இதை உறுதி படுத்தி உள்ளார்.

அதன்படி விரைவில் பயணிகளுக்கு பயணிகள் தகவல் அமைப்பு (பிஐஎஸ்) வழங்கப்படும். அதேபோல் தானியங்கி டிக்கெட் அமைப்பும் வழங்கப்படும். பேருந்துகளில் இருக்கும் கருவி ஒன்றை ஸ்கேன் செய்து நாம் டிக்கெட் எடுக்கலாம். மாநகர பேருந்து கார்டுகள் எதிர்காலத்தில் வழங்கப்படும். அதை இதில் டேப் செய்தும் டிக்கெட் எடுக்கலாம்.

நாம் செல்லும் தூரத்திற்கு ஏற்றபடி டிக்கெட் வழங்கப்படும். வெளிநாடுகளில் இப்படி டேப் செய்யும் முறை ஏற்கனவே அமலில் உள்ளது. அதே முறை சென்னையிலும் கொண்டு வரப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+