தேசியக் கொடி என்றால் சும்மா கிடையாது! அதற்கென்று தனி மரியாதை உண்டு! ஈஸ்வரன் வேண்டுகோள்!
சென்னை: ஆகஸ்ட் 15 அன்று ஏற்றப்பட்ட தேசிய கொடிகள் பல இடங்களில் கிழிந்தும், மோசமான நிலையிலும் இருப்பதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
தேசியக் கொடியை பறக்க விடுவது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் அதை திரும்ப எடுத்து மரியாதையோடு வைப்பது என அவர் குறிப்பிட்டுள்ளார்
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

சுதந்திர தினம்
இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று அனைவரும் வீடுகளில் கொடியேற்ற வேண்டுமென்று பாரத பிரதமர் அவர்கள் அறிக்கை விட்டார். தேசிய உணர்வும், விடுதலை வேட்கையும், சுதந்திர தின மகிழ்ச்சியும் எப்போதும் எல்லோருக்கும் மனதில் இருந்தாலும் பல இடங்களில் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன.

கட்சி கொடிகள்
வீடுகளில் மட்டுமில்லாமல் பல பொது இடங்களிலும் கட்சி கொடிகள் போல பறக்க விடப்பட்டன. பெரும்பாலான இடங்களில் கட்டப்பட்ட தேசிய கொடிகள் இறக்கப்படவில்லை. பல இடங்களில் யாரும் கண்டு கொள்ளாமல் கிழிந்து போய் கிடப்பதும், சேற்றிலே கிடப்பதும் பார்ப்பதற்கு வேதனையாக இருக்கிறது.

தேசியக் கொடி
இந்திய தேசத்தினுடைய தேசியக் கொடியை பறக்க விடுவது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் அதை திரும்ப எடுத்து மரியாதையோடு வைப்பது. தேசியக்கொடிக்கு உரிய மரியாதையை கொடுப்பதற்காகத்தான் எல்லா இடங்களிலும் எப்போதும் கட்டி பறக்க விடுவதற்கு அனுமதி கொடுப்பது கிடையாது.

அலங்கோலமாக
இன்னும் தொடர்ந்து பல இடங்களில் தேசியக்கொடி அவமதிக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அரசாங்கமும், அதிகாரிகளும் உரிய கவனத்தை செலுத்தி தக்க உத்தரவுகளை பிறப்பித்து அலங்கோலமாக ஆங்காங்கே கிடக்கின்ற தேசிய கொடிகளை உடனடியாக எடுத்து பாதுகாக்க வேண்டும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications