இல்லதரசிகளுக்கு அடுத்த பெரிய ட்விஸ்ட்... சமையல் எண்ணெய் விலை கடுமையான உயர்வு
சென்னை: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் சமையல் சிலிண்டரை தொடர்ந்து சமையல் எண்ணெய் உள்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இது சாமானிய மக்களைப் பெரிதும் பாதித்திருக்கிறது . சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், ஓட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன. மறுபக்கம் இருக்கும் ஓட்டல்களில் விலை அதிகமாகி வருகிறது. இந்நிலையில் சமையல் எண்ணெய் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
போர் சூழல் காரணமாக சமையல் எண்ணெய் விலையும் 'கிடுகிடு'வென உயர்ந்திருப்பதாக மொத்த வியாபாரி கொளத்தூர் சாலை வியாபாரி முன்னேற்ற சங்க பொருளாளர் அமிர்தராஜ் கூறினார். மக்கள் பலர் பயன்படுத்தக் கூடிய சூரிய காந்தி எண்ணெய் (சன்பிளவர் ஆயில்) முன்பு ஒரு லிட்டர் ரூ.155-க்கு விற்கப்பட்ட சூழலில், இப்போது ரூ.170-க்கு விற்பனையாகிறது.

விலை எவ்வளவு உயர்வு
சில்லரை கடைகளில் இதன் விலை ரூ.175 ஆக விற்கப்படுகிறது. இதேபோல், பாமாயில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஒரு லிட்டர் மொத்த விலையில் ரூ.110-க்கு விற்கப்பட்ட சூழலில், இப்போது ரூ.122 வரை மொத்த விற்பனை கடைகளில் விற்பனையாகிறது. சில்லரை கடைகளில் இ 130 ஆக விற்பனையாகிறது. அந்தவகையில் சன்பிளவர் மற்றும் பாமாயில் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை கடந்த 2 வாரத்தில் மட்டும் உயர்ந்திருக்கிறது. இதுதவிர, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றின் விலையும் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தப்பட்டு விற்பனையாகிறது.
இறக்குமதி அதிகம்
இந்தியா சமையல் எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை கடல் வழியாகவே இறக்குமதி செய்கிறது. கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படும்போது காப்பீட்டுச் செலவு மற்றும் எரிபொருள் செலவு அதிகரிப்பதாலும் விலை உயரும். அந்த வகையில் தற்போது ஈரான் போரால் கடல்வழி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. சமையல் எண்ணெய் சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பிலேயே வாங்கப்படுகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறையும்போது, இறக்குமதிச் செலவு அதிகரித்து சில்லரை விலையில் எதிரொலிக்கும். இப்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதும் விலை உயர காரணமாகி உள்ளது.
இறக்குமதி அதிகம்
இந்தியா சமையல் எண்ணெய் தேவையில் இறக்குமதியைத்தான் அதிகம் நம்பி இருக்கிறது. இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் தேவையில் சுமார் 55% முதல் 60% வரை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெய்களில் சுமார் 60% பாமாயில் ஆகும். இது முக்கியமாக இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக
சூரியகாந்தி எண்ணெய் . இது உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் இறக்குமதியாகிறது. அதேபோல் சோயாபீன் எண்ணெய் இறக்குமதியாகிறது. இது பெரும்பாலும் பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவிலிருந்து வருகிறது. இந்திய மக்கள் தொகை அதிகம் என்பதுடன் உணவுப் பழக்கவழக்கங்களால் சமையல் எண்ணெய்க்கான தேவை மிக அதிகம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications