மலை ரயில் ரத்து.. களையிழந்த உதகை.. ஆனா இவங்கெல்லாம் ஊட்டிக்கு போகலாமாம்.. யாருனு தெரியுமா?
சென்னை: நீலகிரி மாவட்டத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாளை முதல் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. வார இறுதி நாள் ஊரடங்கும் போடப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.

இதுபோக தமிழகத்தின் கொடைக்கானல், கன்னியாகுமரி, ஊட்டி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், முதுமலை புலிகள் காப்பகம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகியவை மூடப்பட்டுள்ளன.
முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகளின் அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக இருக்கும் ஊட்டி களையிழந்து காணப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் வருகை தர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் நாளை முதல் நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகைக் குறைவு காரணமாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் உதகையில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் இரவு10 மணிக்குள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதே வேளையில் ஊட்டியில் இருந்து தினமும் கோவைக்கு வேலைக்கு சென்று வருபவர்கள், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்கள், மருத்துவ பணிகளில் ஈடுபடுபவர்கள் இதற்கான அனுமதி பெற்று ஊட்டிக்கு சென்று வரலாம் என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
-
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications