சர்ச்சையைத் திட்டமிட்டு உருவாக்க முயல்கிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தில் டிஆர்பி ராஜா ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

செனனை: திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீதான அரசியல் உள்நோக்கம் கொண்ட அவதூறுச் செய்திகள், டெல்டா விவசாயிகளின் துயரமான நிலையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு தெளிவான முயற்சியாகும். அந்த முக்கியக் கேள்விகள் குறித்து விவாதிப்பதற்குப் பதிலாக, விமர்சகர்கள் ஒரு சர்ச்சையைத் திட்டமிட்டு உருவாக்க முயல்கிறார்கள்!

அரசியல் குறித்து விவாதியுங்கள்; கொள்கைகள் குறித்து விவாதியுங்கள். ஆனால், உண்மையான விஷயங்களுக்குப் பதிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போலிச் செய்திகளை முன்வைக்காதீர்கள்! காவிரி விவகாரத்திலிருந்து தவெக அரசு தெளிவாக விலகிச் செல்கிறது!!!எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சுக்கு எழுந்திருக்கும் எதிர்ப்பு, அவரது வார்த்தைகளை விட அதை விமர்சிப்பவர்களைப் பற்றியே அதிகம் வெளிப்படுத்துகிறது. அவர் சட்டமன்றத்திற்கு வந்து கடினமான கேள்விகளைக் கேட்பதை அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் இந்தத் திட்டமிட்ட வெறுப்புப் பிரச்சாரம்!" இவ்வாறு கூறியுள்ளார்.

The outrage over Udhayanidhi s speech says more about his critics than about his words trb rajaa

என்ன பிரச்சனை

தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் விஜய்யை நடிகை த்ரிஷாவுடன் தொடர்புபடுத்தி இரட்டை அர்த்தத்தில் பேசியதாக சர்ச்சை எழுந்தது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம். மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டிக்க தவறியதாக கூறி, தவெக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று தஞ்சாவூரில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

உதயநிதி இரட்டை அர்த்தப்பேச்சு

அந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், காவிரியிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை என்றும், முதல்வர் விஜய் திமுக மீது பொய் வழக்கு போடுவதிலேயே கவனமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். அப்போது மேடையிலிருந்த தொண்டர்கள் சிலர் பிரபல நடிகையின் பெயரைக்கூறி கோஷமிட்டார்கள. அதற்கு உதயநிதி ஸ்டாலின் தண்ணீரை குறிப்பிட்டு இரட்டை அர்த்தத்தில் அளித்த விளக்கம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய மகளிர் ஆணையம்

இதையடுத்து பொதுவெளியில் பெண்களை அவமானப்படுத்தும் வகையிலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்தும் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவும். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் அவசரப் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

உதயநிதி மீது வழக்கு

இதனிடையே தஞ்சை மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கரந்தை மந்தாரடி தெருவை சேர்ந்த பைரவி என்பவர் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் உதயநிதி மீது வழக்கு போடப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினை கைது செய்வதற்காக அவரது வீட்டிற்கு போலீசார் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+