பாஜகவிற்கு உரிய நேரத்தில் கட்சி தலைமை பதில் கொடுக்கும்.. இப்போது அவசியம் இல்லை..ராஜன் செல்லப்பா
பாஜக என்ன விமர்சனம் செய்தாலும் சரி எங்களுடைய தலைமை அதற்கான பதிலை கால நேரம் பார்த்து சொல்வார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜன் செல்லப்பா கூறினார்.
சென்னை: பாஜக என்ன விமர்சனம் செய்தாலும் சரி எங்களுடைய தலைமை அதற்கான பதிலை கால நேரம் பார்த்து சொல்வார்கள். இப்போது அவசியம் ஏற்படவில்லை. அண்ணாமலை எங்களை விமர்சித்தால் கூட அதற்கு எங்கள் தலைமை உரிய நேரத்தில் உரிய வகையில் பதில் சொல்லும் அல்லது நட்பு பாராட்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜன் செல்லப்பா கூறினார்.
பாஜக நிர்வாகிகள் பலர் வரிசையாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால் அதிமுக - பாஜக இடையிலான மோதல் தற்போது முற்றி உள்ளது. பாஜகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த ஐடி விங் நிர்மல் குமார் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்து கொண்டார்.
அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தார். நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தது மட்டுமின்றி தன்னுடன் ஒரு அணியையும் அழைத்துக்கொண்டு சென்றார்.

அதிமுக பாஜக மோதல்?
நேற்று அண்ணாமலையை விமர்சனம் செய்ததால் திலீப் கண்ணனும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து உள்ளார். அதேபோல பாஜகவின் ஓபிசி அணியின் மாநிலச் செயலாளர் அம்மு என்கிற ஜோதி அதிமுகவில் இன்று இணைந்துள்ளார். மேலும், பல பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது. அண்ணாமலையை விமர்சித்து விட்டு அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருவது பாஜக தலைமைக்கும் அதிமுக தலைமைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராஜன் செல்லப்பா பதில்
இந்தச் சூழலில் பாஜக நிர்வாகிகள் விலகல் குறித்து அமர் பிரசாத் ரெட்டி , எடப்பாடி பழனிசாமியைச் சாடும் வகையில் ட்வீட் செய்திருந்தார். அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம் அடுத்தடுத்த நகர்வுகளால் பரபரப்பாகி வரும் நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையும் காட்டமாக பேட்டி அளித்து இருந்தார். இந்த சூழலில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜன் செல்லப்பா, பாஜக என்ன விமர்சனம் செய்தாலும் சரி எங்களுடைய தலைமை அதற்கான பதிலை கால நேரம் பார்த்து சொல்வார்கள் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக ராஜன் செல்லப்பா கூறியதாவது:-

தேர்தல் கால நட்பு கட்சிகள்தான்
அதிமுகவில் பல பேரை இணைப்பது இயற்கை. தமிழகத்தை பொறுத்தவரை திமுக அண்ணா திமுக என்ற இரண்டு கட்சிகள்தான். அதிமுகவில் பல கட்சியில் இருந்தும் வந்து சேர்கின்றனர். அதே போலத்தான் பாஜகவில் இருந்து வந்து சேர்ந்துள்ளனர். அவர்கள் செய்த விமர்சனம் என்பது தனிப்பட்ட விமர்சனம். எடப்பாடி தூண்டுதலில் இதை சொல்லவில்லை. அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை சொல்லியிருக்கிறார்கள். அதிமுக சொல்லவில்லை. நட்பு கட்சிகள் தேர்தல் கால நட்பு கட்சிகள்தான். பொதுவாக அரசியலில் சில செய்திகளை வெளியில் சொல்ல முடியாது.

சரியான அணுகுமுறை இல்லாததால்
அந்த மாதிரி சூழலிலும் கூட கடைசி நேரம் வரை பாஜக ஒரு முடிவை எடுக்காமல் இழுத்தடித்ததில் எடப்பாடிதான் அதிமுக தலைமை என்று பாஜக உணர்வதற்கு கால தாமதம் ஆகிவிட்டது என்ற மன வருத்தம் எங்களுக்கு எல்லாம் இருந்தாலும் கூட அதை நட்பு கட்சி என்பதை மறுக்கவில்லை. ஆனாலும் கூட ஒவ்வொரு கால கட்டத்தில் தேர்தல் நேரம் வருகிற போது எப்போதும் அந்தக் கூட்டணி இருக்கும் என்பதிலே எங்களிடம் கருத்தொற்றுமை இல்லை. ஏனெனில் சரியான அணுகுமுறை இல்லாத காரணத்தால் பாஜகவிற்கு அளித்த ஆதரவை ஜெயலலிதா திரும்ப பெற்ற வரலாறும் அதிமுகவிற்கு உண்டு.

அதிமுக தலைமையில் தான் கூட்டணி
தமிழகத்தை பொருத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணியே தவிர எந்த தேசிய கட்சியாக இருந்தாலும் சரி, எங்களின் தோளில் ஏறி உட்காருவதற்கு கூட சில நேரங்களில் அனுமதித்து இருக்கிறோம். ஆனால், காதை கடிக்க போனால் தான் இறக்கி வாய்ப்பு இருக்கிறது. ஆகவே எங்களோடு துணை இருக்கலாமே தவிர எங்களுக்கு தலைமை வகிக்கிற வாய்ப்பு எந்த தேசியக் கட்சிக்கும் இருக்காது. அதிமுக தொடர்ந்து போராடும்.. வெற்றி பெறும். மீண்டும் அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமரும்.

கால நேரம் பார்த்து சொல்வார்கள்
பாஜக என்ன விமர்சனம் செய்தாலும் சரி எங்களுடைய தலைமை அதற்கான பதிலை கால நேரம் பார்த்து சொல்வார்கள். இப்போது அவசியம் ஏற்படவில்லை. அண்ணாமலை எங்களை விமர்சித்தால் கூட அதற்கு எங்கள் தலைமை உரிய நேரத்தில் உரிய வகையில் பதில் சொல்லும் அல்லது நட்பு பாராட்டும். இவ்வாறு ராஜன் செல்லப்பா கூறினார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications