பூந்தமல்லி டூ கிண்டிக்கு விரைவில் நல்ல செய்தி.. முகலிவாக்கத்தில் ஈரடுக்கு மெட்ரோ.. பணிகள் விறுவிறு
சென்னை: சென்னை முகலிவாக்கத்தில் ஈரடுக்கு மெட்ரோ ரயில் பாதை பணிகள் அமைக்கப்படுகிறது. இது மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் (வழித்தடம்-5) வருகிறது. அதில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதால், போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. ஈச்சங்காடு மற்றும் வெள்ளக்கால் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித் தடங்களில் 116.1 கிலோ மீட்டர் தொலைவில் செயல்படுத்தப்படுகிறது. வழித்தடம்-3 மாதவரம் முதல் சிப்காட் வரை (45.8 கி. மீ), வழித்தடம்-4 கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை (26.1 கி. மீ), வழித்தடம்-5 மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை (47 கி. மீ) செயல்படுத்தப்படுகிறது. 63 ஆயிரத்து 246 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது

உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் சிப்காட் வரை 45.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும் 3-வது வழித்தடத்தை பொறுத்தவரை, 19 கிலோ மீட்டர் மேம்பாலத்திலும், 26.4 கிலோ மீட்டர் பாதை பூமிக்கு அடியிலும் செல்கிறது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 49 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. வருகிற 2028-ம் ஆண்டின் இறுதியில் திட்டத்தை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருகிறது. இதில் சில பகுதிகள் நடப்பாண்டு செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை முகலிவாக்கத்தில் ஈரடுக்கு மெட்ரோ ரயில் பாதை பணிகள் அமைக்கப்படுகிறது. இது மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் (வழித்தடம்-5) வருகிறது. அதில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதால், போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. ஈச்சங்காடு மற்றும் வெள்ளக்கால் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 2028-ம் ஆண்டுக்குள் இந்த பணியை முடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
அதேபோல் மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துள்ள சில பகுதிகளில், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் மற்றும் ரயில் பாதை அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அத்துடன் மவுண்ட் பூந்தமல்லி சாலையிலும் மெட்ரோ பணிகள் வேகமெடுத்துள்ளது. அதேபோல், திருமங்கலம் சிக்னல் அருகில் ரயில் நிலையம் அமைக்க பழைய கட்டிடங்களை இடித்து நிலம் கையப்படுத்தப்படும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அங்கு பணிகள் நடக்கும் பகுதிகளில் சாலை விரிவாக்கம் மற்றும் பாலங்கள் இடிப்பு போன்ற காரணங்களால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருமங்கலம் சிக்னல் அருகில் பணிகள் முடிந்தால் மக்கள் மிகப்பெரிய அளவில் பயனடைவார்கள். இது ஒருபுறம் எனில் வடபழனி பூந்தமல்லி இடையே மெட்ரோ சேவையை கொண்டுவருதில் மெட்ரோ அதிக ஆர்வம் காட்டி வருகிறது. வரும் பிப்வரிக்குள் பூந்தமல்லியில் இருந்து வடபழனிக்கு மெட்ரோ ரயிலில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications