சிலம்பத்துக்கு நேர்ந்த அநீதி.. துயர் துடைத்த ஸ்டாலின்!.. வெளிச்சம் தந்த முதலமைச்சர் கோப்பை..
சென்னை: இந்த முறை நடைபெற்ற 'முதலமைச்சர் கோப்பை போட்டி' மிகப் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
இந்தப் போட்டியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து கிட்டத்தட்ட 27000க்கும் மேலான வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 38 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 15 விளையாட்டுகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.

விளையாட்டுத்துறையின் அமைச்சராக உதயநிதி பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் முதலமைச்சர் கோப்பைப் போட்டி இது. ஆகவே தடபுடலாக நடந்தது.
இந்தப் போட்டியில் முதன்முறையாகச் சிலம்பாட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, ஒற்றைக்கொம்பு, இரட்டைக் கொம்பு, மான் கொம்பு, அலங்காரம், சுருள் வாள் என 5 பிரிவுகளில் சிலம்பம் பங்கேற்றது.

ஆட்சிக்கு வந்த உடனேயே ஸ்டாலின் சிலம்பக்கலை வீரர்களுக்கு அரசு வேலைகளில் 3% இடஒதுக்கீட்டை வழங்கினார். தமிழ்ப் பாரம்பரியக் கலையான சிலம்பம் இதுவரை இந்தப் போட்டிக்குள் கொண்டுவரப்படவில்லை என்பது எவ்வளவு பெரிய அநீதி.
எப்படியோ இந்த முறை முதலமைச்சர் கோப்பை போட்டியில் சிலம்பத்திற்கு முதன்முறையாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்றுத் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த சிலம்பக்கலை வீரர் சந்தீப். அவர் இந்த அங்கீகாரம் பற்றி என்ன சொல்கிறார்?

"கடந்த 20 ஆண்டுகளாக நான் சிலம்பாட்டம் கற்றுவருகிறேன். நான் இதற்கு முன்பாக நடந்த இண்டர்நேஷனல் போட்டியில் வென்றிருக்கிறேன். அதற்குப் பிறகு 2 ஆண்டுகள் கழித்து இப்போது நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்று இருக்கிறேன்.
இந்தப் போட்டியில் எங்களுக்கான பொதுப்பிரிவைக் கொண்டுவந்துள்ளார்கள். அதில்தான் நாங்கள் பங்கேற்றோம். சுருள் வாள் மற்றும் ஒற்றைக்கம்பு வீச்சு இரண்டிலும் மாநில அளவில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளேன். அதற்கு முன்பாக நடந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் 5 பதக்கங்களைப் பெற்றுள்ளேன்" என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "இதுவரை முதலமைச்சர் கோப்பையில் பாரம்பரியக் கலைகள் சார்ந்த விளையாட்டுகள் பங்குபெற்றதில்லை. இப்போதுதான் முதன்முறையாகச் சிலம்பாட்டத்தை உள்ளே கொண்டுவந்துள்ளார்கள்.
இப்போதுதான் எங்களை உயர்வான விளையாட்டுக்களோடு சேர்த்து அதே மரியாதையைக் கொடுத்திருக்கிறார்கள். கடந்த ஆட்சியில் எங்களை யாரும் கண்டுகொள்ளவே இல்லை.
முதலமைச்சர் கோப்பையில் முன்பு சிலம்பாட்டமே சேர்க்கப்படவில்லை. இப்போது போட்டியில் சிலம்பத்தைச் சேர்த்ததோடு, விருதுக்கான தொகையையும் அதிகப்படுத்தி இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். நான் 2 லட்ச ரூபாய் வென்றுள்ளேன். அதற்காகவே நான் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

வழக்கமாகச் சிலம்பம் போட்டி என்றால் சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள்தான் சிறப்பாக விளையாடுவார்கள். ஆனால், இந்த முறை பல மாவட்டங்களிலிருந்து நன்றாக ஆடக்கூடியவர்கள் உள்ளே வந்தார்கள். அதனால் போட்டியின் வேகம் அதிகமாக இருந்தது. பல கட்ட மோதலில் நாங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய தேவை இருந்தது. இது கூடுதல் உற்சாகத்தைக் கொடுத்தது" என்கிறார்
சிலம்பாட்ட ஆசிரியர்கள் சீனிவாசன் மற்றும் குகன், "நாங்கள் 30 வருடங்களாகச் சிலம்பம் கற்றுக் கொடுத்துவருகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே ஸ்டாலினைச் சென்று பார்த்து கோரிக்கை வைத்தோம். அவர் ஆட்சிக்கு வந்ததும் நான் உங்களுக்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு தருகிறேன் என்று வாக்குறுதி அளித்தார்.

அதேபோல் அவர் ஆட்சிக்கு வந்த 3ஆம் மாதமே 3% இடஒதுக்கீட்டை ஏற்படுத்தித் தந்தார். முன்பு எல்லாம் சிலம்பம் என்றால் 50 பேர் வருவார்கள். இந்த ஒதுக்கீட்டுக்குப் பிறகு ஆயிரக்கணக்கான பிள்ளைகள் வந்து விளையாட்டை கற்று வருகிறார்கள். இந்த மாற்றத்தால் கூடுதலாகச் சிலம்பாட்டம் செழித்து வளரும்.
அமைச்சராக உதயநிதி பதவியேற்றதிலிருந்து அவர் சிலம்பாட்டத்திற்கு நல்ல முக்கியத்துவத்தைத் தந்து வருகிறார். பொதுவாகவே அவரது ஆட்சிக்காலத்தில் விளையாட்டுத்துறை செழிப்பாக மாறியுள்ளது" என்கிறார்

அடுத்து 200 மீட்டர் நீச்சல் போட்டியில் முதல் பரிசை வென்ற ஸ்ரீநிதி, "நான் 2 வயதிலிருந்து நீச்சல் கற்றுக்கொண்டு இருக்கிறேன். இப்போது எனக்கு 12 வயது ஆகிறது. அப்பா மூலமாகத்தான் இந்த ஆர்வம் வந்தது. தினம் காலை 3 மணிநேரம் பயிற்சி செய்வேன். மாலை 3 மணி நேரம் பயிற்சி. அதற்கு நடுவில் பள்ளிப்படிப்பு" என்கிறார்.
கடந்த மாதம் நடந்த தேசிய மகளிர் கால்பந்தாட்டப் போட்டியில் தமிழ்நாடு அணி தங்கம் வென்றிருந்தது. அந்த அணியில் பங்கேற்றவர் நந்தினி. அந்த அணியை முதலமைச்சர் கோப்பை விழாவில் அழைத்துக் கௌரவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவர் இந்த வெற்றி குறித்து என்ன சொல்கிறார்?
"எங்கள் பி.டி. ஆசிரியைதான் முதன்முதலாக எனக்கு ஃபுட் பால் விளையாட்ட நன்றாக வரும் என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னார். நான் நன்றாக ஓடுவேன். அதைப் பார்த்த அவர் அந்த முடிவுக்கு வந்தார். அவரது தூண்டுதல்தான் என்னை இங்கே கொண்டுவந்து நிறுத்தியுள்ளது" என்றபடி பேசத் தொடங்கினார் நந்தினி.

"9 ஆம் வகுப்பிலிருந்து விளையாடிக் கொண்டிருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வருகிறேன். தமிழ்நாடு மகளிர் அணி இதுவரை 2 முறை தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.
2018 ஆம் ஆண்டு 18 வருடங்களுக்குப் பிறகு முதல்முறை பதக்கம் வென்றோம். அப்போது மணிப்பூர் அணியுடன் மோதி வென்றோம். அப்போது நான்தான் அணிக்கு கேப்டன். ஆகவே கூடுதல் சந்தோஷம் எனக்கு இருந்தது.
அதன்பிறகு 5 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 இல் மீண்டும் தங்கப்பதக்கம் வென்றுள்ளோம். அதற்கு நம் அரசாங்கம்தான் காரணம். எங்களை முன்பைவிட அதிகம் ஊக்குவித்து வருகிறார்கள். குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுக்கு நல்ல மதிப்பளிக்கிறார். அதைப்போலத்தான் உதய் அண்ணா. அவர் வந்த பிறகு அதிக கவனம் எங்கள் துறைக்குக் கிடைத்துள்ளது.

அவர் அதிக போட்டிகளை நடத்துகிறார். இந்த முறை முதலமைச்சர் கோப்பை மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. முன்பு அப்படி இல்லை. எங்களை அழைத்து முதல்வர் கௌரவித்தார். நாங்கள் அதை நினைத்தே பார்க்கவில்லை. இப்படியான அங்கீகாரங்கள்தான் ஒரு விளையாட்டு வீரர்க்கு ரொம்ப முக்கியம். அந்த மதிப்பை இன்றைய அரசு எங்களுக்குத் தாராளமாகத் தந்து வருகிறது" என்கிறார்.
எட்டுத் திக்கும் வெல்லட்டும் தமிழ்நாடு!
-
2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை சாத்தியமா .. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கிய ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?












Click it and Unblock the Notifications