பொன்னமராவதி விவகாரம்.. பெண்களை இழிவாக பேசிய தீய சக்திகள்... ட்விட்டரில் பொங்கிய ஹெச். ராஜா
சென்னை: ஒரு பிரிவு சமுதாய மக்களை குறிப்பாக அச்சமுதாய பெண்களை இழிவாக பேசிய சமூகவிரோத தீய சக்திகளை காவல்துறை, உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா வலியுறுத்தி உள்ளார்.
ஒரு சமூகத்தினர் பற்றிய அவதூறு வாட்ஸ்அப் ஆடியோவால் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கலவரம் ஏற்பட்டது. போராட்டத்தின்போது பொன்னமராவதி காவல்நிலையம், போலீஸ் வாகனங்களும் தாக்கப்பட்டன. இது தொடர்பாக, 1,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 50 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று ஒருநாள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொன்னமராவதி மோதலை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஷ்வரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முத்தரையர் சமுதாய மக்களை குறிப்பாக அச்சமுதாய பெண்களை இழிவாக பேசிய சமுகவிரோத தீய சக்திகளை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுடன் நாம் உணர்வுப் பூர்வமாக இணைந்திருப்போம்.சட்டரீதியில் போராடும் அதே நேரத்தில் அனைவரும் அமைதி காக்க வேண்டுகிறேன். https://t.co/vBvUpBEshV
— Chowkidar H Raja (@HRajaBJP) 20 April 2019
பொன்னமராவதி பதற்றத்தை தணிக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கலவரம் பரவாமல் தடுக்க, 1, 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கலவரம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஹெச். ராஜா, ஒரு பிரிவு சமுதாய மக்களை குறிப்பாக அச்சமுதாய பெண்களை இழிவாக பேசிய சமுகவிரோத தீய சக்திகளை காவல்துறை, உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுடன் நாம் உணர்வுப் பூர்வமாக இணைந்திருப்போம். சட்டரீதியில் போராடும் அதே நேரத்தில் அனைவரும் அமைதி காக்க வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications