’நெட் கால்’.. ஆம்ஸ்ட்ராங் கொலையில் புள்ளிகளை இணைக்கும் ‘மாஸ்டர் மைண்ட்’..விசிக பிரமுகரிடம் விசாரணை.!
சென்னை: தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் வழக்கறிஞராக பணிபுரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரிடம் போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் பிரபல ரவுடியான திருவேங்கடம், திருநின்றவூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அருள், திருவள்ளூர் திமுக மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியின் மகனான சதீஷ், திருநின்றவூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான செல்வராஜ், தாமாக மாநில மாணவர் அணி நிர்வாகியான ஹரிஹரன், பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவரான அஞ்சலை, கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப், விஜயகுமார், முகுந்தன், விக்னேஷ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே காவலில் எடுக்கப்பட்ட ரவுடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரைத் தவிர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 21 பேர் சிறையில் இருந்தனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது தந்தை நாகேந்திரனையும் போலீசார் கைது செய்தனர். இதுமட்டுமல்லாமல், இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரன் சிறையில் இருந்த படியே கொலைத் திட்டத்திற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததும். வழக்கறிஞரும் ரவுடியுமான சம்போ செந்தில் கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து தலைமுறைவாக இருக்கும் சம்போ செந்தில், சீசிங் ராஜா, மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபல ரவுடிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதில் சம்போ செந்தில் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கிறார். அவர் தொடர்ந்து விபிஎன்-ஐ பயன்படுத்தி நெட் கால் மூலம் தனது கூட்டாளிகளுடன் பேசி வருகிறார். இதனால் அவர் எங்கு இருக்கிறார் என்பதை போலீசாரால் பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் மொட்டை கிருஷ்ணனுடன் தொடர்பில் இருந்ததாக பிரபல இயக்குனர் நெல்சன் மனைவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இது மட்டுமல்லாமல் நேற்று மூன்று பேரை இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தான் வழக்கில் திடீர் திருப்பமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவரிடம் போலீசார் விசாரணையை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் அந்த நபருக்கும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமனுக்கும் பல்வேறு வகைகளில் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டதால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் கூறுகின்றனர். மேலும் அவரை கைது செய்து விசாரிக்கும் போது கொலை வழக்கின் அனைத்து புள்ளிகளையும் இணைக்கும் அந்த பாயிண்ட் கிடைக்கும் என்கின்றனர் போலீசார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications