தயிர் கிண்ணத்துக்கும், பட்ஜெட் பெட்டிக்கும் என்ன சம்பந்தம்? ஒரு கரண்டி வெள்ளை நிற இனிப்பின் ரகசியம்
சென்னை: பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக நிர்மலா சீதாரமன், ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ஜனாதிபதி திரெளபதி முர்மு தயிருடன் இனிப்பு கலந்து நிர்மலா சீதாராமனுக்கு ஊட்டினார். நாட்டின் மிக முக்கியமான நிதி ஆவணமாக கருதப்படும் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய நாடாளுமன்றத்திற்கு புறப்படும் நிதியமைச்சருக்கு, குடியரசு தலைவரால் தலைவர் சர்க்கரையும், தயிரும் ஊட்டி விடுவது ஏன் தெரியுமா? இதற்கு ஆரோக்கிய காரணம், ஆன்மீக காரணம், அறிவியல் காரணமும் அடங்கி உள்ளது..!!
இந்திய கலாச்சாரத்தில் எந்தவொரு நல்ல காரியத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு, தயிர் மற்றும் சர்க்கரை சாப்பிடுவது என்பது காலம் காலமாக தொடர்ந்து வரும் ஒரு அழகான நம்பிக்கையாகும்.. தேர்வு எழுத செல்லும் மாணவர் முதல் முக்கியமான நேர்காணலுக்கு செல்பவர் வரை பலரும் இதை இன்றும் கடைப்பிடிக்கிறார்கள்.

அதேபோல இனிப்பான உபசரிப்பு அரசியலும் உள்ளது.. இது ஒரு வழக்கமான சம்பிரதாயம் மட்டுமல்ல, பாரம்பரியம் மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
சுப காரியங்கள் - ஐதீகம்
ஆன்மீக ரீதியாக பார்த்தால், பல பரிகாரங்களில் தயிர் பயன்படுத்தப்படுகிறது. தயிர் என்பது சுக்கிர பகவானின் காரணியாகும். சுக்கிர பகவானின் செல்வாக்கினால் ஒருவருக்கு மகிழ்ச்சி, செல்வம் மற்றும் அனைத்து பொருள் சுகங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தயிரில் சர்க்கரை சேர்க்கும்போது சுக்கிர கிரகத்தின் சுப பலன்கள் மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
இதனால் சுப காரியங்களை செய்வதற்கு முன் தயிர்-சர்க்கரை சாப்பிட்டால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் என்பது மக்களின் ஐதீகமாக உள்ளது.. தயிர் ஒரு மங்கலப் பொருளாகவும், தூய்மையின் அடையாளமாகவும் கருதப்படுவதாலும், புதிய முயற்சிகளில் தடைகள் விலகி வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், இந்த தயிர்-சர்க்கரை தரும் வழக்கம் உள்ளது..
இதனால்தான் பட்ஜெட் போன்ற நாட்டின் மிக முக்கிய நிகழ்வுக்கு முன்பாக இது ஒரு சடங்காகவே மாறிவிட்டது.
தயிர் - சர்க்கரை
இதையே அறிவியல் ரீதியாக பார்த்தால், தயிர் என்பது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் ஒரு மிகச்சிறந்த உணவுப் பொருள்... பட்ஜெட் போன்ற ஒரு மிகப்பெரிய பொறுப்பை சுமந்து செல்லும்போது நிதியமைச்சருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கவும், பதற்றமில்லாமல் நிதானமாக செயல்படவும் இது பெருமளவில் உதவுகிறது.
அதேபோல், சர்க்கரையில் உள்ள குளுக்கோஸ் மூளைக்கு உடனடி ஆற்றலை தந்து, நீண்ட நேரம் நின்று உரையாற்ற தேவையான புத்துணர்ச்சியை வழங்குகிறது. தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, சோர்வையும் நீக்க கூடியவை..
இனிப்பு திட்டங்கள்
தயிர்-சர்க்கரை சாப்பிடுவதால் உடலுக்குதேவையான ஆற்றல் கிடைத்து, சோர்வு நீங்கும். தயிரில் சர்க்கரை சேர்க்கும்போது அது குளுக்கோஸாக செயல்பட்டு உடனடி ஆற்றலைத் தருகிறது.
ஒரு சாதாரண வீட்டில், ஒரு தாய் தன்னுடைய குழந்தைக்கு தயிர்-சர்க்கரை கொடுத்து ஆசீர்வதித்து அனுப்புவது போல, நாட்டின் பொருளாதார திட்டங்களை அறிவிக்க போகும் நிதியமைச்சருக்கு, ஒட்டுமொத்த தேசமும் ஆசி வழங்குவதன் அடையாளமாகவே குடியரசு தலைவரின் இந்த உபசரிப்பு அமைகிறது.
இனிப்பான நம்பிக்கை
நிதியமைச்சகத்தின் வாசலில் புன்னகையுடன் பட்ஜெட் பெட்டியை அல்லது நவீன டிஜிட்டல் டேப்லெட்டை ஏந்தி நிற்கும் நிதியமைச்சர், இந்த இனிப்பான நம்பிக்கையுடன்தான் நாட்டு மக்களுக்கான திட்டங்களை அறிவிக்கத் தயாராகிறார்.
அந்தவகையில்தான் இப்போதும் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக நிர்மலா சீதாரமன், ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ஜனாதிபதி திரெளபதி முர்மு தயிருடன் இனிப்பு கலந்து நிர்மலா சீதாராமனுக்கு ஊட்டிவிட்டார்..
காலங்கள் மாறினாலும், டிஜிட்டல் பட்ஜெட்கள் வந்தாலும், நம்ம மண்ணின் மணமும் பாரம்பரியமும் மாறாமல் இருப்பதற்கு இந்த நிகழ்வு ஒரு மிகச்சிறந்த உதாரணமாக விளங்கி கொண்டிருக்கிறது..
சுருக்கமாக சொன்னால், ஒரு ஸ்பூன் இனிப்புக்குள் பல நூற்றாண்டு கால இந்திய பண்பாட்டு அர்த்தம் பொதிந்து காணப்படுகிறது....!!!
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications