61 நாள் ரெஸ்ட்! கரைக்கு திரும்பிய மீனவர்கள்.. மீன்கள் வாங்க குவிந்த மக்கள்! வஞ்சிரம் மீன் இவ்வளவா?
சென்னை : மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைகாலம் தொடங்கியதையடுத்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற விசைப்படகுகள் கரைக்கு திரும்பிய நிலையில், மீன்கள் வாங்க அசைவ பிரியர்கள் ஆர்வம் காட்டினர்.
Recommended Video
தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் 1983ஆம் ஆண்டு சட்ட விதி முறையின்படி மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீனவர்களுக்கு 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்த வருடம் கடந்த 15ம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரையிலான 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமானது அமல்படுத்தப்பட்டுள்ளது.

மீன்பிடி தடைக் காலம்
மீன்பிடி தடை காலம் குறித்து மீன்வளம் மற்றும் மீன்பிடி துறைமுக மேலாண்மை பிரிவு அலுவலகத்தின் சார்பாக மீனவர்களுக்கு இதுதொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது அதன்படி ஏப்ரல் 15ஆம் தேதி முதல் விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல கூடாது என்றும் அதேபோன்று ஏற்கனவே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 15ஆம் தேதிக்கு முன்னதாக கரைக்கு வர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது

கரைக்கு திரும்பிய மீனவர்கள்
அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வின் காரணமாக 50 சதவீத படகுகள் மட்டுமே கடலுக்குள் மீன்பிடிக்க சென்று வந்த நிலையில் தற்போது ஆழ்கடல் மீன் பிடிப்புக்குச் சென்றிருந்த அனைத்து படகு மீனவர்களும் கரைக்கு திரும்பியுள்ளனர். தாங்கள் பிடித்து வந்த மீன்களை வரும் புதன் கிழமைவரை விற்பனை செய்ய மீனவசங்கம் சார்பில் அனுமதிக்கப்பட்டிருந்தது.

குவிந்த அசைவ பிரியர்கள்
ஞாயிற்றுகிழமை விடுமுறை தினமான இன்று மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுக ஏலக்கூடத்திற்கு அதிக அளவில் குவிந்துள்ளனர். தற்போதைய தினத்தை விட்டால் கிட்டதட்ட 61 நாட்களுக்கு தாங்கள் மீன்களை வாங்கமுடியாது என்று பொதுமக்கள் மீன்களை வாங்க கணிசமானஅளவில் குவிந்த வண்ணம் உள்ளனர்

மீன்கள் விலை உயர்வு
மீன்களின் விலையை பொறுத்தமட்டில் வஞ்சிரம் கிலோ 1300 ரூபாய் வரையிலும் , சங்கரா கிலோ"600 ரூபாய் வரையிலும் வவ்வாள் கிலோ 600 வரையிலும் நண்டு 500ரூபாய் மதிப்பிலும் , கடமா கிலோ 450 வரையிலும் விற்பனையாகி வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் . மீன்பிடி தடைகாலமான 61நாட்களில் விசைப்படகுகள் தவிர நாட்டுப் படகுகள் பைபர் படகுகள் ஆகியவற்றைக்கொண்டு கடலோர கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மீன் பிடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு எந்த ஒரு தடையும் கிடையாது என்பதும் குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications