சின்ன மூக்குத்தி இருந்தால் கூட.. கொண்டாடுங்க! தங்கம் விலை 10 மடங்கு உயரப்போகிறது.. வல்லுனர் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கத்தின் விலை 10 மடங்கு உயரப்போவதாக Rich Dad Poor Dad என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார்.

அதிகம் விற்பனையாகி உலக அளவில் சாதனை படைத்த நிதி நிர்வாக புத்தகமான Rich Dad Poor Dad என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தங்கம் விலை குறித்து தைரியமாக கணித்துள்ளார், 2035-ம் ஆண்டுக்குள் பிட்காயின் $1 மில்லியனைத் தாண்டும், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $30,000 ஆக இருக்கும். வெள்ளி 2035-ம் ஆண்டுக்குள் ஒரு நாணயத்திற்கு $3,000-ஐ எட்டும் என்று கணித்துள்ளார்.

1 அவுன்ஸ் = 28.3495 கிராம் ஆகும். இதன் அடிப்படையில் பார்த்தால் 2035 டாலர் மதிப்பை உத்தேசமாக வைத்து பார்த்தால் 1 கிராம் தங்கத்தின் விலை 1.15 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும். சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,758 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,945 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,405 ஆகவும் உள்ளது. அதாவது தங்கத்தின் விலை 10 மடங்கு உயரும் என்று அவர் கூறி உள்ளார்.

The price of gold will increase 10-fold says Rich Dad Poor Dad Book Author Robert Kiyoski

அதோடு, வெள்ளி ஏற்றம் கண்டு வருகிறது. விநியோகத்தை விட தேவை அதிகம் உள்ளது. தங்கம் ஒரு அவுன்ஸ் 3115 டாலரை கடந்து உள்ளது. வெள்ளி 60% உயர்து உள்ளது. இது ஒரு அவுன்ஸ் $34 ஆக உள்ளது. சில மாதங்களில் வெள்ளி 2 மடங்கு அதிகரித்து ஒரு அவுன்ஸ் $70 ஆக இருக்கும் என்று நான் கணிக்கிறேன்.

என்னிடம் ஏற்கனவே நிறைய வெள்ளி உள்ளது. வெள்ளி தங்கம் கொஞ்சம் இருந்தாலும் சேமித்து வையுங்கள். அதுதான் முக்கியம். வெள்ளியில் முதலீடு செய்ய நீங்கள் பணக்காரராக இருக்க வேண்டியதில்லை. உலகில் உள்ள அனைவராலும் குறைந்தபட்சம் 1 அவுன்ஸ் வெள்ளி வாங்க முடியும். வெள்ளி வாங்க வாங்க உங்கள் வாழ்க்கை மாறும். போலியான காகிதப் பணத்தைச் சேமிப்பதை விட வெள்ளியைச் சேமியுங்கள். தங்கம், சில்வர் மற்றும் பிட்காயின் ஆகியவற்றில் ஒன்றில் முதலீடு செய்பவர்களே புத்திசாலிகள்.

முட்டாள்களாக இருக்காதீர்கள். தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயின் சேமிக்கவும், என்று Rich Dad Poor Dad என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார்.

1 லட்சம் ரூபாயை அடைகிறது

கடந்த சில வாரங்களாக தங்கம் விலை ஏற்றத்தில் உள்ளது. இந்த நிலையில் தங்கத்தின் விலை மேலும் உயருமா.. 1 லட்சம் ரூபாயை அடையுமா அல்லது சரியுமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் MCX தங்கத்தின் விலை சுமார் 25% உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த 5 வருடங்களில் மட்டும் 10 கிராமுக்கு ₹44,906 இலிருந்து ₹95,239 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 17 ஏப்ரல் 2020 முதல் 17 ஏப்ரல் 2025 வரை தங்கத்தின் விலை சரமாரியாக உயர்ந்து உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் 110%க்கும் அதிகமாக தங்கத்தின் விலை உயர்ந்து உள்ளது.

சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,758 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,945 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,405 ஆகவும் உள்ளது. இப்போது 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்தை அடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஸ்பாட் தங்கம் 1 அவுன்ஸுக்கு 2.8% உயர்ந்து $3245ஆக இருந்தது. அமெரிக்க தங்கம் 3.5% உயர்ந்து $3242ஆக இருந்தது. 1 அவுன்ஸ் என்பது 28 கிராம் ஆகும். கிட்டத்தட்ட மூன்றரை பவுன் தங்கத்தின் விலை ஆகும் இது. இதன் இந்திய மதிப்பு 2.75 லட்சம் ரூபாய் ஆகும். உலக வரலாற்றில் முதல்முறையாக இந்த தொகையை தங்கம் அடைந்து உள்ளது.

உலகளாவிய தரகு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் தங்கத்தின் விலை இலக்கை அவுன்ஸ் ஒன்றுக்கு $3,300லிருந்து $3,700 ஆக உயர்த்தியுள்ளது. சமயத்தில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 4,500 டாலர்களைத் தொடும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது. பொதுவாக இந்த நிறுவனத்தின் கணிப்புகள் தங்கம் விலையில் துல்லியமாக இருக்கும். இவர்களே $3,700 என்று சொல்வதால் 10 கிராம் தங்கம் இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்தை அடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+