புதுக்கோட்டை: முறிந்த 30 ஆயிரம் மரங்கள்.. மின்சாரம் கிடைக்க ஒருவாரம் ஆகும்! இருளில் தவிக்கும் நாகை!
Recommended Video

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் சாலையில் விழுந்துள்ளதால் அந்த மாவட்டம் முழுவதும் மின்சாரம் கிடைக்க இன்னும் ஒரு வார காலம் ஆகும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். அது போல் நாகை மாவட்டமும் இருளில் மூழ்கியுள்ளது.
கஜா புயல் சைலான்ட்டாக இருந்து மற்றவர்களின் கேலி கிண்டலுக்குள்ளான நிலையில் தான் யார் என்பதை நிரூபிக்கும் வகையில் கோர தாண்டவம் ஆடியுள்ளது. வர்தா புயலுக்கு சற்றும் சளைக்காத புயலாக மாறியது.
இதனால் 7 மாவட்டங்களில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. வேதாரண்யத்தில் செல்போன் டவரையே சாய்த்து விட்டது. புதுக்கோட்டையில் புயல் பாதித்த பகுதிகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு நடத்தினார்.
[காரைக்கால்: நடுக்கடலில் நின்ற 700 டன் எடை கொண்ட கப்பலை கரைக்கு இழுத்து வந்த கஜா!]

ஒரு வாரம்
அப்போது அந்த மாவட்டம் முழுவதும் மின்சாரம் கிடைக்க இன்னும் ஒரு வார காலம் ஆகும். புதுக்கோட்டை நகர் பகுதியில் இன்றைக்குள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

30 ஆயிரம் மரங்கள்
30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து கிடக்கிறது. வெளிமாவட்டங்களை சேர்ந்த 500 பணியாளர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றார் விஜயபாஸ்கர்.
|
கோர தாண்டவம்
இருளில் மூழ்கியது நாகை: கோரத் தாண்டவம் ஆடிய கஜா புயலால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இதில் கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

முடங்கிய நாகை
பல்வேறு இடங்களில் மின் கம்பம் சாய்ந்தும், மரங்கள் விழுந்தும் மின் ஒயர்கள் அறுந்தும் கிடக்கின்றன. இதனால் மின்சாரம் வழங்க முடியாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக எந்த வித தொலைத் தொடர்பு, மற்றும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப பணிகளும் நடைபெறாமல் முடங்கி கிடக்கிறது நாகை.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications