3 பெயர் ரெடி.. பொங்கலுக்கு லான்ச் செய்ய திட்டம்.. ரஜினி சேனல் தொடங்க காரணம் என்ன தெரியுமா?
பல்வேறு திட்டங்களை மனதில் வைத்து நடிகர் ரஜினிகாந்த் தொலைக்காட்சி சேனல் தொடங்கும் முடிவை எடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது.
சென்னை: பல்வேறு திட்டங்களை மனதில் வைத்து நடிகர் ரஜினிகாந்த் தொலைக்காட்சி சேனல் தொடங்கும் முடிவை எடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது.
நேற்று ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அதில் எனது பெயரில் புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்க உள்ளோம். அதற்காக பதிவு செய்து இருக்கிறோம் , என்று கூறினார்.
இதனால் அவர் சேனல் தொடங்குவது உறுதியாகி உள்ளது. தற்போது இந்த சேனல் குறித்து சில அப்டேட்கள் வெளியாகி உள்ளது.

எப்போது வருகிறது
இந்த சேனலை நடிகர் ரஜினிகாந்த் வரும் பொங்கல் அன்று திறக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது. பொங்கல் அன்று பேட்ட படம் ரிலீஸ் ஆகிறது. அதே தினம் இந்த சேனலும் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

என்ன பெயர்கள்
ஏற்கனவே இதற்காக மூன்று பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி என்ற பெயர்களை பதிவு செய்து இருக்கிறார்கள். இதில் பெரும்பாலும் தலைவர் டிவி என்ற பெயர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

யார் தலைமை
அதேபோல் இது பெரும்பாலும் செய்தி சேனலாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளனர். பிரபல செய்தியாளர் ஒருவர் இதில் தலைமை செய்தியாசிரியராக சேர போகிறார் என்றும் தகவல்கள் வருகிறது. இதுகுறித்து விரைவில்அறிவிப்புகள் வெளியாகலாம்.

காரணம் என்ன
நடிகர் ரஜினிகாந்த் அடுத்த வருடம் அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் உள்ளார். அதனால், தனது அரசியல் பயணத்துக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று சேனல் தொடங்க திட்டமிட்டுள்ளார். தன்னுடைய பிரச்சாரங்கள், கொள்கைகளை பரப்ப முடிவெடுத்து இந்த சேனலை தொடங்க உள்ளார் என்கிறார்கள்.

சில கசப்புகள்
ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த சில பேட்டிகள் பெரிய விமர்சனங்களை சந்தித்தது. ஊடகங்களில் இவர் மீது பெரிய விமர்சனங்கள் எழுந்தது. இதனால் தனக்கு என்று தனி சேனல் இருக்க வேண்டும் என்று விரும்பி இவர் சேனல் தொடங்க போவதாகவும் கூறப்படுகிறது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications