சட்டசபையில் இன்று 5 முக்கிய குழுக்களின் அறிக்கைகள் தாக்கல்! இன்றைய நிகழ்வுகளின் விவரம்!
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் சட்டசபையில் இன்று 5 முக்கிய குழுக்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
பொதுக்கணக்கு குழு, பொது நிறுவனங்கள் குழு, சட்டவிதிகள் ஆய்வுக் குழு, அரசு உறுதிமொழிக் குழு, மநுக்கள் குழு, என 5 குழுக்களின் அறிக்கைகளையும் அதன் தலைவர்கள் சட்டசபையில் தாக்கல் செய்கிறார்கள்.
இதனிடையே ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து திமுக சட்டமன்ற உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் பேசுகிறார்.

இது தொடர்பான விவரம் வருமாறு;
(1) பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கைகள் அளித்தல்
திரு. கு. செல்வபெருந்தகை, பொதுக் கணக்குக் குழுத் தலைவர், 2021-2023-ஆம் ஆண்டிற்கான மேற்படி குழுவின் ஐம்பத்து ஒன்பதாவது முதல் எண்பத்து ஒன்றாவது வரையிலான (பதினாறாவது சட்டமன்றப் பேரவை) அறிக்கைகளை அளிப்பார்.
(2) பொது நிறுவனங்கள் குழுவின் அறிக்கைகள் அளித்தல்
திரு. S.R. இராஜா, பொது நிறுவனங்கள் குழுத் தலைவர், 2021-2023-ஆம் ஆண்டிற்கான மேற்படி குழுவின் முப்பத்து நான்காவது முதல் முப்பத்து ஒன்பதாவது வரையிலான (பதினாறாவது சட்டமன்றப் பேரவை) அறிக்கைகளை அளிப்பார்.
(3) சட்ட விதிகள் ஆய்வுக் குழுவின் அறிக்கைகள் அளித்தல்
திரு. இரா. இராஜேந்திரன், சட்ட விதிகள் ஆய்வுக் குழுத் தலைவர், 2021-2023-ஆம் ஆண்டிற்கான மேற்படி குழுவின் ஐந்தாவது மற்றும் ஆறாவது (பதினாறாவது சட்டமன்றப் பேரவை) அறிக்கைகளை அளிப்பார்.
(4) அரசு உறுதிமொழிக் குழுவின் அறிக்கைகள் அளித்தல்
திரு. தா. உதயசூரியன்,அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர், 2021-2023-ஆம் ஆண்டிற்கான மேற்படி குழுவின் ஒன்பதாவது முதல் முப்பத்து மூன்றாவது வரையிலான (பதினாறாவது சட்டமன்றப் பேரவை) அறிக்கைகளை அளிப்பார்.
(5) மனுக்கள் குழுவின் அறிக்கைகள் அளித்தல்
முனைவர் கோவி. செழியன், மனுக்கள் குழுத் தலைவர், 2021-2023-ஆம் ஆண்டிற்கான மேற்படி குழுவின் பதின்மூன்றாவது முதல் இருபதாவது வரையிலான (பதினாறாவது சட்டமன்றப் பேரவை) அறிக்கைகளை அளிப்பார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications