ரூ.427 கோடி.. சென்னையின் அடுத்த ராட்சச பேருந்து நிலையம்.. 50 நாட்களில் திறக்க தீவிர ஏற்பாடு!
சென்னை: சென்னையில் அமைக்கப்பட்டு வரும் புதிய குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் அடுத்த 50 நாட்களில் திறக்கப்பட உள்ளது. 427 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் 2025ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூன் மாதம் மக்களுக்காக திறக்கப்படும்.
90 சதவிகிதம் இதன் கட்டுமானம் முடிந்துள்ளது. அழகுபடுத்தும் பணிகள், மின்சார இணைப்பு பணிகள் உட்பட்ட 10 சதவிகித பணிகள் அங்கே நடந்து கொண்டு இருக்கின்றன. இது போக அம்பத்தூர் மற்றும் தொண்டியார்பேட்டை பேருந்து முனையங்களில் முறையே 57 மற்றும் 52 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது ஆகும். இதன் சீரமைப்புப் பணிகளும் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இது போக செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரத்தில் புதிய பேருந்து முனையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சென்னை முழுவதும் உள்ள ஒன்பது பெருநகர பேருந்து முனையங்கள் பயணிகள் பயணத்தை எளிதாக்கும் வகையில் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.

இடமாற்றம் செய்யப்படுகிறது
இந்த நிலையில் பூந்தமல்லியில் இருந்து இயங்கி வரும் பேருந்துகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளன. சென்னையில் உள்ளூர் அளவிலான இணைப்பை மேம்படுத்த பூந்தமல்லி பேருந்து மையம் குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.
MTC பூந்தமல்லியில் இருந்து குத்தம்பாக்கத்திற்கு 150 பேருந்துகளை மாற்றி இணைப்பை மேம்படுத்தும். பூந்தமல்லி டெப்போவில் 120 மின்சார பேருந்துகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு உள்ளது.
முதல் கட்டமாக பெங்களூர், தர்மபுரி மற்றும் தமிழ்நாட்டின் மற்ற வடக்கு பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் திருமழிசை அருகே குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு வரவிருக்கும் பேருந்து நிலையங்களில் மற்ற அரசின் பயன்படுத்தாத வாகனங்களை நிறுத்துவதற்கும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) முடிவு செய்துள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்:
இதனால் கிளாம்பாக்கத்தில் கூட்ட நெரிசல் குறையும் வாய்ப்புகள் உள்ளன. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முடிச்சூரில் ஆம்னி பேரூந்துகளுக்கான தனி பேருந்து நிலையம் கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிந்த நிலையில் கடைசி கட்ட சீரமைப்புகள் நடக்கின்றன.
இங்கே பல்வேறு திட்டங்கள் வர உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட்டில் குடியிருப்புகள், சில ஐடி நிறுவனங்கள், விளையாட்டு தொடர்பான திட்டங்கள் வர உள்ளன. அங்கே விளையாட்டு அரங்கம், ஹை ரைஸ் கட்டிடம் ஒன்றும் வர உள்ளது.
ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் காலியாகிவிட்டது. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையமும் மூடப்பட உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் பெங்களூர், தர்மபுரி மற்றும் தமிழ்நாட்டின் மற்ற வடக்கு பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் திருமழிசை அருகே குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு வரவிருக்கும் பேருந்து நிலையங்களில் மற்ற அரசின் பயன்படுத்தாத வாகனங்களை நிறுத்துவதற்கும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) முடிவு செய்துள்ளது.
கோயம்பேட்டில் என்ன வருகிறது?
இந்த நிலையில்தான் இங்கே பிரம்மாண்ட ஐடி நிறுவனம் அமைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் 2 மாதங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். அங்கே நில ஆய்வு தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications