இந்த மூன்று புதிர்களுக்கு உங்களால் சரியான விடை கண்டுபிடிக்க முடியுமா? விடைகளில் உள்ள சூட்சமம்
சென்னை: பலர் புதிர் கணக்குகளுக்கு விடை அளிக்க ஆர்வமாக இருப்பார்கள். அப்படி ஆர்வமாக இருப்பவர்களுக்காக இந்த செய்தியில் மூன்று கேள்விகளின் படங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பதில்களையும், முறையையும் கொண்டவை ஆகும். உங்களுக்கு இந்த கணக்குகளுக்கு விடை தெரியுமா என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
யுபிஎஸ்சி, குரூப் 1, குரூப் 2, குரூப் 4 போன்ற டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பல்வேறு வகையான கணிதம் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். இந்தகேள்விகளை பலர் சமூக வலைதளப்பக்கத்தில் கேட்டு பதிலை பெற விரும்புகிறார்கள். அதேபோல் விசித்திரமான கேள்விகளை எழுப்பி, கணித முரண்பாடுகளை கேட்கிறார்கள். அந்த வகையில நாம் மூன்று கேள்விகளையும், அதற்கான பதில்களையும் பார்ப்போம்.

முதல் கேள்வி
3=12
4=20
5=30
6=?
விடையை கண்டுபிடிக்கும் முறை 1: கொடுக்கப்பட்ட எண்ணை அதற்கு அடுத்த எண்ணால் பெருக்குவது (n×(n+1))
3×4=12
4×5=20
5×6=30
6×7=42
முறை 2: எண்ணின் வர்க்கத்துடன் (Square) அதே கூட்டிக் கொள்வது (n2 +n)
3^2 +3=9+3=12
4^2 +4=16+4=20
5^2 +5=25+5=30
6^2 +6=36+6=42
சரியான விடை: 42
------------
கணக்கிடும் முறை (BODMAS / PEMDAS விதிப்படி):
கணித விதிகளின்படி, பல செயல்பாடுகள் (Operations) ஒரே கணக்கில் வரும்போது BODMAS விதியைப் பயன்படுத்த வேண்டும். இதில் கழித்தல், பெருக்கல், கூட்டல் ஆகிய மூன்றில் பெருக்கலைத் தான் முதலில் செய்ய வேண்டும்.
கணக்கு: 2-2×3+3
முதல் படி (பெருக்கல்):
முதலில் 2×3-ஐப் பெருக்க வேண்டும்.
2×3=6
இப்போது கணக்கு: 2-6+3
இரண்டாம் படி (கூட்டல் / கழித்தல்):
இடமிருந்து வலமாகச் செய்ய வேண்டும்.
2-6=-4
மூன்றாம் படி:
இப்போது -4 உடன் +3-ஐக் கூட்ட வேண்டும்.
-4+3=-1
சரியான விடை: -1
-----------------
மூன்றாவது கேள்வி
2
6
18
54
?
கணக்கிடும் முறை (Logic/Pattern):
இந்த வரிசையில் உள்ள ஒவ்வொரு எண்ணும் 3-ஆல் பெருக்கப்பட்டு அடுத்த எண் பெறப்படுகிறது (×3):
2×3=6
6×3=18
18×3=54
54×3=162
சரியான விடை: 162

இந்த நான்காவது கேள்விக்கு விடை தெரிந்தவர்கள் கமெண்டில் கூறுங்கள்.


Click it and Unblock the Notifications
