உடல்நலக் குறைவால் தாய் மரணம்! அடக்கம் பண்ண கூட கையில் காசில்லையே! மகன் செய்த செயலை பாருங்க..!
சென்னை : சென்னையில் உடல் நல குறைவால் உயிரிழந்த 86 வயதான தாயின் உடலை ட்ரமில் போட்டு, சிமெண்ட் மூலம் பூசி மூடிய மகன் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை நீலாங்கரை பகுதியில் மூதாட்டி செண்பகம் (86) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவரது இளைய மகன் சுரேஷ், செண்பகம் வசித்த அதே வீட்டின் மேல்தளத்தில் வசித்து வருகிறார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

வயதான தாய்
இந்நிலையில் இவருடைய மூத்த மகன், தாயார் செண்பகத்திடம் தொலைபேசியில் பேச கடந்த சில தினங்களாக முயற்சித்துள்ளார். அப்போது, அவர் கடைக்கு சென்றிருப்பதாகவும், உறங்கி கொண்டிருப்பதாகவும் தம்பி சுரேஷ் தெரிவித்துள்ளார்.இதனால் சந்தேகமடைந்த செண்பகத்தின் மூத்த மகன், வீட்டிற்கு நேரடியாக சென்று சுரேஷிடம் விசாரித்துள்ளார்.

ட்ரம்மில் உடல்
பயந்துபோன சுரேஷ், தாயார் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டதாகவும், தன்னிடம் காசு இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல், உயிரிழந்த தாயாரை ட்ரம்மில் போட்டு, சிமெண்ட் பூசி மூடிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சுரேஷின் அண்ணன், உடனடியாக நீலாங்கரை போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

போலீசார் விசாரணை
அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த செண்பகத்தின் உடலை ட்ரம்முடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே, உடல்நலக்குறைவால் செண்பகம் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

மக்கள் அதிர்ச்சி
அதே நேரத்தில் சென்பகத்தை அவரது மகனே கொலை செய்து ட்ரம்மில் வைத்து பூசியிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிப்பதால், 174 பிரிவின் கீழ் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 86 வயதான தாயின் உடலை ட்ரமில் போட்டு, சிமெண்ட் மூலம் பூசி மூடிய மகனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications