வந்தே பாரத் ரயிலில் பயணிக்க போறீங்களா? உங்களுக்குத்தான் இந்த செய்தி.. ரயில்வே புதிய முடிவு
சென்னை: வந்தே பாரத் ரயில்களில் முழு பயணங்களுக்கு ஒரே குழுவை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வந்தே பாரத் ரயிலில் பல்வேறு விதிகள் மாற்றப்பட்டு வருகின்றன. இதன் இயக்கம் தொடர்பாக பல முக்கிய விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட வந்தே பாரத் ரயில்களை சுத்தம் செய்வதில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டன. 15 நிமிடத்தில் வந்தே பாரத் ரயில்களை சுத்தம் செய்வதற்கான நடைமுறை கொண்டு வரப்பட்டது.

மொத்த ரயிலையும் 15 நிமிடத்தில் சுத்தம் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான திறமையான பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த நிலையில்தான் வந்தே பாரத் ரயில்களில் முழு பயணங்களுக்கு ஒரே குழுவை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஓட்டுநர் முதல் பணியாளர்கள் வரை அடங்கிய ஒரே குழு முழு பயணத்திற்கும் பணி செய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் வரை ஒரே குழு பணி செய்யும். அதன்படி சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலில் இப்போது இடையில் திருச்சியில் குழு மாறும்.
சமையல் செய்பவர்கள் குழு, ஓட்டுநர், சுத்தம் செய்பவர்கள், நடத்துனர்கள் மாற்றப்படுவார். ஆனால் இனி அப்படி இருக்காது. இடையே குழு மாறும் முறை தற்போது உள்ளது: இனி குழு மாற்றப்படாது. இனி முழு பயணத்திற்கும் ஒரே குழு இயங்கும். ஒரே குழு முழு பயணத்திற்கும் பணி செய்வதால் அசதி ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
தேஜாஸ், சதாப்தி ரயில்களிலும் முழு பயணத்திற்கும் ஒரே குழு பயன்படுத்தப்படும். முன்பெல்லாம் சில மணிநேரங்களுக்குப் பிறகு பணியாளர்கள் மாறுவார்கள், உதாரணமாக, எழும்பூரில் இருந்து புறப்படும் சென்னை - மதுரை பாண்டியன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், திருச்சியில் பணியாளர்கள் மாறுவார்கள். இப்போது குழுவினர் எந்த இடைவேளையும் இல்லாமல் இலக்கு வரை செயல்படுவார்கள், இதனால் அவர்களுக்கு உணவு மற்றும் ரெஸ்ட் ரூம் செல்வது கடினம் ஆகும்.
இது கவன சிதறல்கள், விபத்துகளை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன. இந்த ரயில்கள் 8-9 மணி நேரம் இயங்குவதால் ஒரே குழுவை பயன்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
சாதாரண ரயில்: இதற்கு இடையில் வந்தே பாரத் சாதாரண் ரயில் இந்த மாத இறுதியில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
முன்பதிவு தேவையில்லாத பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. ஏசி இல்லாத 'வந்தே பாரத்' ரயில் தயாரிப்பு பணிகள் முடிந்து உள்ளன. இதையடுத்து குறைந்த கட்டணத்தில் இந்த ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
வந்தே பாரத் சாதாரண் ரயில் என்பது சாதாரண மக்கள் பயணிக்கும் வந்தே பாரத் ரயில் என்பதை குறிப்பது ஆகும். இதில் ஏசி இல்லாத 8 கோச்சுகள் கொண்ட சேவை தொடங்கப்பட உள்ளது. 12 மூன்றாம் தர ஏசி கோச்சுகள், 2 முதல் தர ஏசிகளும் கொண்ட 22 பெட்டி ரயில் ஆகும். தற்போது இருக்கும் வந்தே பாரத் ரயிலில் உள்ளது போன்ற அதே வசதிகள் இதிலும் இருக்கும்.
அதாவது மாடர்ன் தோற்றம், உள்ளே பயோ டாய்லெட், தானாக மூடும் கதவும், அதிக வேகம், சிசிடிவி கேமரா, சுத்தம் என்று எல்லா வசதிகளும் இருக்கும். ஆனால் புக்கிங் செய்தால் மட்டுமே பயணம் என்ற நிலை இருக்காது. ஒரு சில பெட்டிகளில் இதில் ஏசி இருக்காது. இதனால் கணிசமான கட்டணம் குறையும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications