அரசு எங்களுக்கு கடன் பட்டிருக்கிறது! ஸ்டிரைக் நிச்சயம் நடக்கும்..போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கறார்
சென்னை: கடந்த 8 ஆண்டுகளுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். வேலை நிறுத்தத்திற்கு எதிராக தமிழக அரசு இன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதால், வேலை நிறுத்தம் நிச்சயம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் போக்குவரத்து கழகத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன. குறிப்பாக கடந்த காலங்களில் தீபாவளி, ஆயுதபூஜை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை நாட்களில் இவர்களின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கதாக இருந்திருக்கிறது. ஆனால், போதுமான ஊழியர்கள் இல்லாததால் பணிச்சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, புதியதாக வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட வேண்டும் என்று ஊழியர்கள் போராடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வேலை நிறுத்த போராட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில், "போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் 1,30,000 தொழிலாளர்களுக்கு கடந்த 01.09.2023 அன்று முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை இதுவரை தமிழ்நாடு அரசு தொடங்கவில்லை. மேலும், கடந்த 2015 ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள 90,000 ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியும் இதுவரை அரசால் வழங்கப்படவில்லை.
இதர அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையான மருத்துவக் காப்பீடும் வழங்கப்படவில்லை என்பதோடு, பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுவதும் அண்மைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, காலியாகவுள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களும் நிரப்பப்படாததோடு, பேருந்து சேவைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், மகளிருக்கான இலவசப் பேருந்து சேவையால் போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்படும் நட்டத்தையும் தமிழ்நாடு அரசு ஈடுசெய்வதில்லை. போக்குவரத்து தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதியும் அரசால் செலவிடப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டு நிலுவையிலுள்ள அகவிலைப்படி உயர்வைக் கணக்கிட்டு முழுமையாக வழங்குவோம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்றெல்லாம் திமுக தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. ஆனால் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பின்னர் இவை நிறைவேற்றப்படவில்லை. இப்படியாக 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.
எனவே இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போக்குவரத்து சங்கங்கள் நாளை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசுடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதால் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தரராஜன் கூறுகையில், "6 அம்ச கோரிக்கைகளில் எதையும் இப்போது ஏற்க இயலாது என அரசு பதிலளித்துள்ளது. இது நியாயமற்ற பதில், போக்குவரத்து துறை தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. அரசு கடந்த 8 ஆண்டுகளாக எங்களுக்கு கடன்பட்டிருக்கிறது. எங்களை அரசு இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது. எனவே எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாதவரை பேருந்துகள் இயக்கப்படாது" என்று கூறியுள்ளார்.
ஆனால், தொ.மு.ச உள்ளிட்ட தொழிற்சங்கங்களை கொண்டு வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications