ஏற்றுமதி நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம்.. ஆனால் இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் தடை!
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்ததால் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பால் பூத், மருந்தகம் தவிர மளிகை, காய்கறி கடைகள் இயங்க கூட அனுமதி இல்லை.

இந்த நிலையில் தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்த முழு ஊரடங்கில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது 8 மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் 50% ஊழியர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை. தற்போது இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலை ஊழியர்கள் ஒருமாதத்திற்குள் தடுப்பூசி கொரோனா போட வேண்டும். தொழிற்சாலைகளுக்கு நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே ஊழியர்களை அழைத்து செல்ல வேண்டும். இரு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதியில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications