லட்டு மாதிரி வந்து மாட்டுது.. ஸ்டாலினின் திடீர் பாய்ச்சல்.. சர்வேயில் அந்த 3 விஷயத்தை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக இதுவரை வெளியாகி இருக்கும் கருத்து கணிப்புகளில் எல்லாம் முக்கியமான 3 விஷயங்கள் தொடர்ந்து குறிப்பிடப்பட்டு வருகின்றது. இந்த மூன்று விஷயங்கள்தான் தமிழகத்தில் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்க போவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக இதுவரை டைம்ஸ் நவ், சி வோட்டர், மாத்ருபூமி, ஏபிபி, புதிய தலைமுறை என்று பல செய்தி நிறுவனங்கள், கருத்து கணிப்பு நிறுவனங்கள் தேர்தல் கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. இதுவரை வெளியான அனைத்து கருத்து கணிப்பிலும் திமுகதான் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

திமுகவோ இந்த கருத்து கணிப்பில் இருப்பதை விட அதிக இடங்களில் வெல்வோம், எங்களின் நோக்கமே 200+ இடங்களை வெல்வதுதான் என்று திமுக தரப்பு தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வருகிறது.

தேர்தல்

தேர்தல்

இதுவரை வெளியாகி இருக்கும் சர்வேயில் எல்லாம் முக்கியமான சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி திமுகவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உதாரணமாக டைம்ஸ் நவ் சில வாரங்களுக்கு முன் வெளியிட்ட கருத்து கணிப்பில் திமுக தலைமையிலான கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், அதிமுக அணிக்கு 65 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது திமுக முன்னேற்றம் அடைந்துள்ளது.

திமுக

திமுக

நேற்று வெளியான கருத்து கணிப்பின்படி, திமுக 177 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்றும் அதிமுக-பாஜக கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் டைம்ஸ் நவ்-சி வோட்டர் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.மொத்தத்தில் திமுகவின் செல்வாக்கு முன்பை விட தேர்தல் நெருங்க நெருங்க உயர்ந்து கொண்டே வருகிறது. இடையில் வந்த கருத்து கணிப்புகளிலும் திமுக கொஞ்சம் கொஞ்சமாக அதிக இடங்களை பெற்றது.

கணிப்பு

கணிப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 151 முதல் 158 இடங்கள் பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்று புதிய தலைமுறை கருத்து கணிப்பு வெளியிட்டு இருந்த நிலையில் இடையில் ஏபிபி கணிப்பில் 160+ இடங்களை திமுக பெறும் என்று கூறப்பட்டது, மாத்ருபூமி கணிப்பிலும் திமுக 177 இடங்களை பெறும் என்று கூறப்பட்டது.. மொத்தத்தில் திமுகவின் வெற்றி வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தேர்தலுக்கு முன் இந்த நிகழ்வுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

இரண்டாவது விஷயம்

இரண்டாவது விஷயம்

இதில் கவனிக்க வேண்டிய இரண்டாவது விஷயம் சென்னை மற்றும் வடதமிழகத்தில் திமுகதான் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. பாமக கூட்டணி , வன்னியர் இடஒதுக்கீடு இருந்தாலும் கூட அதிமுக வடதமிழகத்தில் வெற்றிபெற வாய்ப்பு இல்லை என்று கருத்து கணிப்புகள் கூறுகிறது. புதிய தலைமுறை கணிப்பின்படி தமிழகத்தில் தெற்கு மண்டலத்தில் திமுகவுக்கு 45-49 இடங்கள் கிடைக்கும். மேற்கு மண்டலத்தில் திமுகவுக்கு 11-14 இடங்கள் கிடைக்கும். தமிழகத்தில் மத்திய மண்டலத்தில் திமுகவுக்கு 21-22 இடங்கள் கிடைக்கும். வடக்கு மண்டலத்தில் திமுகவுக்கு 54-59 இடங்கள் கிடைக்கும். தமிழகத்தில் சென்னை மண்டலத்தில் திமுகவுக்கு 17-18 இடங்கள் கிடைக்கும்.

வடக்கு மண்டலம்

வடக்கு மண்டலம்

தமிழகத்தில் தெற்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு 11-15 இடங்கள் கிடைக்கும். மேற்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு 28-31 இடங்கள் கிடைக்கும். மத்திய மண்டலத்தில் அதிமுகவுக்கு 14-15 இடங்கள் கிடைக்கும். தமிழகத்தில் வடக்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு 19-24 இடங்கள் கிடைக்கும்.

சென்னை

சென்னை

சென்னை மண்டலத்தில் அதிமுகவுக்கு 0-1 இடங்கள் கிடைக்கும். இதேபோல் நேற்று வெளியான டைம்ஸ் நவ் கணிப்பிலும் வடதமிழகத்திலும், சென்னையிலும் திமுகவே வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.இந்த முறை சென்னையில் அதிமுகவை திமுக வாஷ் அவுட் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இந்த கணிப்புகள் கூறுகிறது.

திமுக

திமுக

இதெல்லாம் போக மூன்றாவதாக கொங்கு மண்டலத்திலும் திமுகவே வெற்றிபெறுகிறது என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதிமுகவின் கோட்டையாக இருந்த கொங்கு மாவட்டத்தில் திமுக புதிய எழுச்சி பெறுகிறது. அதேபோல் டைம்ஸ் நவ் கணிப்பின்படி கொங்கில் திமுக 38 இடங்களை பெறும். இங்கு அதிமுக வெறும் 12 இடங்களை மட்டுமே பெறும்.

டைம்ஸ்

டைம்ஸ்

அதிமுக முன்பை விட 20 இடங்களை இங்கு இழக்க போவதாக கணிப்புகள் தெரிவிக்கிறது. கொங்கு மண்டலத்தில் திமுகவின் எழுச்சியே இந்த தேர்தலில் அந்த கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று இதுவரை வெளியான கணிப்புகள் தெரிவிக்கின்றன. தேர்தல் நேரத்தில் என்ன நடக்கிறது.. இந்த மூன்று விஷயங்கள் திமுகவின் வெற்றியை உறுதி செய்யுமா.. இல்லை காற்று திசை மாறுமா என்று பார்க்கலாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+