டைமிங்கை கவனிச்சீங்களா? ஸ்டாலின் எழுதிய 16 பக்க லெட்டர்.. டெல்லியில் ஆளுநர் ரவி.. என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆளுநர். ஆர். என் ரவிக்கும் இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆளுநருக்கு எதிராக புகார்களை அடுக்கி முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்களின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கு 08.07.2023 அன்று கடிதம் எழுதியுள்ளார். இப்பொருள் குறித்த தனது 10-1-2023 நாளிட்ட கடிதத்தினை 12-1-2023 அன்று புதுதில்லியில், தமிழ்நாடு அரசின் சட்ட அமைச்சர் மற்றும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களிடம் அளித்ததை நினைவுகூர்வதாகவும், அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொருள் குறித்து தற்போது மாண்புமிகு குடியரசுத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் நிருவாக அதிகாரம் ஆளுநரிடம் உள்ளதாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. இருப்பினும், பெயரளவில் மாநிலத்தின் தலைவரான ஆளுநர், தனது அதிகாரத்தை மாநில முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவைக் குழுவின் ஆலோசனை மற்றும் அறிவுரைப்படியே பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தை முதல்வர் ஸ்டாலின் எழுதிய நேரம்தான் அதிக கவனம் பெற்றுள்ளது. ஏனென்றால் இந்த கடிதத்தை நேற்று முதல்வர் ஸ்டாலின் எழுதி உள்ளார். நேற்றுதான் ஆளுநர் ஆர். என் ரவி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தீவிர ஆலோசனையில் இருந்தார். அந்த ஆலோசனைக்கு இடையில்தான் அதே நேரம் பார்த்து ஸ்டாலின் இங்கே இருந்து டெல்லிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
முற்றும் மோதல்: சமீபத்தில்தான் அதிமுக மாஜி அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரை விசாரிக்க அனுமதி கேட்டு தமிழ்நாடு தனக்கு எந்த கடிதமும் வரவில்லை என்று ஆளுநர் ஆர். என் ரவி குறிப்பிட்டு இருந்தார். ஆனால் ஆளுநர் ரவி அரசிடம் இருந்து கடிதத்தை வாங்கிவிட்டு தற்போது வாங்கவில்லை என்று கூறுவதாக அமைச்சர் ரகுபதி பதிலடி அளித்து இருந்தார்.
இந்த நிலையில்தான் ஆளுநர் கடிதத்தை வாங்கியதற்கான ஒப்புகை சீட்டு ஆதாரத்தை தற்போது தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. ஆளுநர் மாளிகை தங்களுக்கு கடிதம் எதுவும் வரவில்லை என்று கூறிய நிலையில் ஆளுநர் மாளிகை கடிதத்தை பெற்றுக்கொண்டதற்கான acknowledgement ஐ அனுப்பி உள்ளது என்ற ஆதாரத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.
என்ன நடந்தது?: முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை துவக்குவதற்கு தேவையான இசைவு ஆணையை விரைந்து அனுப்புமாறும், மாநில அரசு நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்குமாறும் ஆளுநர் ஆர் என் ரவிக்கு தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்த கடிதத்திற்கு பதில் அளித்த ஆளுநர் ஆர். என் ரவி, முன்னாள் அதிமுக அமைச்சர் திரு. கே.சி. வீரமணி மீதான ஊழல் வழக்கு தொடர்பாக உறுதிபடுத்தப்பட்ட விசாரணை அறிக்கை கிடைக்கப்பெறவில்லை என்றும், முன்னாள் அமைச்சர் திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர் ஊழல் வழக்கிற்கு இசைவாணை கேட்டு எந்த கோரிக்கையும் ராஜ்பவனில் இருந்து பெறப்படவில்லை என்றும் பதில் அளித்தார். அதாவது எம்.ஆர். விஜயபாஸ்கர் ஊழல் வழக்கிற்கு இசைவாணை தமிழ்நாடு அரசு கடிதம் எதுவும் அளிக்கவில்லை என்று கூறினார்.
இதையடுத்து சட்ட அமைச்சர் வெளியிட்ட பதில் கடிதத்தில், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை துவக்குவதற்கு தேவையான இசைவு ஆணையை விரைந்து அனுப்புமாறும், மாநில அரசு நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்குமாறும் ஆளுநர் ஆர் என் ரவி அவர்களுக்கு 3.7.2023 அன்று கடிதம் எழுதியிருந்தேன். அந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக 6.7.2023 அன்று வெளியிடப்பட்டுள்ள ராஜ்பவன் பத்திரிக்கை செய்தியில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
முன்னாள் அதிமுக அமைச்சர் திரு. கே.சி. வீரமணி மீதான ஊழல் வழக்கு தொடர்பாக உறுதிபடுத்தப்பட்ட விசாரணை அறிக்கை கிடைக்கப்பெறவில்லை என்றும், முன்னாள் அமைச்சர் திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர் ஊழல் வழக்கிற்கு இசைவாணை கேட்டு எந்த கோரிக்கையும் ராஜ்பவனில் இருந்து பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உண்மை என்னவென்றால் - முன்னாள் அமைச்சர் திரு. கே.சி.வீரமணியின் ஊழல் வழக்கு விசாரணையின் கோப்பு மொத்தமாக ஆளுநருக்கு 12.9.2022 அன்றே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கோப்பில் லஞ்ச ஒழிப்புத்துறையின் இறுதி விசாரணை அறிக்கை, விழிப்புணர்வு ஆணையத்தின் பரிந்துரை அனைத்தும் அடங்கியிருக்கிறது. 298 நாட்களுக்கு முன்பு உறுதிசெய்யப்பட்ட இறுதி விசாரணை அறிக்கையை பெற்றுக் கொண்டு - கோப்பை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் கையெழுத்தும் போட்டு விட்டு இன்று உறுதி செய்யப்பட்ட விசாரணை அறிக்கை கிடைக்கவில்லை என்று கூறுவது ஆளுநர் அலுவலகத்திற்கு அழகல்ல.
ராஜ்பவன் வாதப்படி வைத்துக் கொண்டால் கூட - நான் ஆளுநருக்கு கடிதம் எழுதும் வரை அந்த கோப்பு குறித்து எந்த விவரமோ, விளக்கமோ கேட்டு தமிழக ஆளுநரிடமிருந்து கடிதமும் வரவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி விஷயத்தில் இவ்வளவு வேகமாக அவரை நீக்க வேண்டும் என்று கடிதம் எழுதிய ஆளுநர் ஊழல் வழக்கின் நீதிமன்ற விசாரணையை தொடர அனுமதிக்காமல் - இசைவாணையை நிறுத்தி வைத்து ஏன் இப்போது ஆதாரமற்ற ஒரு காரணத்தைச் சொல்கிறார் என்பதும் தெரியவில்லை.
இது மட்டுமின்றி - அதிமுக முன்னாள் அமைச்சர் திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர் ஊழல் வழக்கில் இசைவாணை கோரி லஞ்ச ஒழிப்புத்துறையின் இறுதி விசாரணை அறிக்கை, விஜிலென்ஸ் ஆணையத்தின் பரிந்துரை ஆகியவை அடங்கிய ஒரிஜினல் கோப்பு - ஆளுநருக்கு 15.5.2023 அன்றே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கோப்பை பெற்றுக் கொண்டதற்கு ராஜ்பவன் ஒப்புதல் கடிதமும் அளித்துள்ளது. நிர்வாக நடைமுறைப்படி அனுப்பி வைக்கப்பட்ட அந்த கோப்பு ராஜ்பவனுக்கு வரவில்லை என்று 53 நாட்கள் கழித்து ராஜ்பவன் வெளியிட்டிருக்கும் செய்தி வியப்பாகவும் - விந்தையாகவும் இருக்கிறது.
மாண்புமிகு ஆளுநர் அவர்கள் அரசியல் சட்டப்படியான பணிகள் செய்வதை கைவிட்டு - கட்சி அரசியல் பணிகளை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார் என்பதையே தனது அலுவலகத்திற்கு வந்த கோப்பையே வரவில்லை என்று சொல்ல வைத்திருக்கிறது என்பதே உண்மை என்று தெரிகிறது. அல்லது ராஜ்பவன் அலுவலகம் ஆளுநரின் கட்டுப்பாட்டில் இல்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது.
ராஜ்பவன் பத்திரிக்கை செய்தி ஆதாரமற்றது என்பதை எல்லாம் ஆதாரத்துடன் விளக்கி- முன்னாள் அமைச்சர்கள் டாக்டர். சி. விஜயபாஸ்கர், திரு. ரமணா ஆகியோருக்கு எதிரான குட்கா ஊழல் வழக்கில் நீதிமன்ற விசாரணையை துவக்குவதற்கு தேவையான இசைவு ஆணையை விரைந்து வழங்குமாறு சிபிஐ அமைப்பிடம் இருந்து 30.6.2023 அன்று மாநில அரசுக்கு வந்துள்ள கடிதம் பற்றிய விவரத்தையும் எடுத்துக் கூறி- முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் இசைவாணை வழங்குவதை மேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்கிடுமாறு ஆளுநர் அவர்களுக்கு மீண்டும் இன்று கடிதம் எழுதியிருக்கிறேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
இதையடுத்தே அதிமுக மாஜி அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரை விசாரிப்பது தொடர்பான கடிதத்தை ஆளுநர் பெற்றுக்கொண்டதற்கான நகல் வெளியிடப்பட்டு உள்ளது.
அதிமுக மாஜி அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரை விசாரிக்க அனுமதி கேட்டு தமிழ்நாடு தனக்கு எந்த கடிதமும் வரவில்லை என்று ஆளுநர் ஆர். என் ரவி குறிப்பிட்டு இருந்தார். ஆனால் ஆளுநர் ரவி அரசிடம் இருந்து கடிதத்தை வாங்கிவிட்டு தற்போது வாங்கவில்லை என்று கூறுவதாக அமைச்சர் ரகுபதி பதிலடி அளித்து இருந்தார்.
இந்த நிலையில்தான் ஆளுநர் கடிதத்தை வாங்கியதற்கான ஒப்புகை சீட்டு ஆதாரத்தை தற்போது தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. ஆளுநர் மாளிகை தங்களுக்கு கடிதம் எதுவும் வரவில்லை என்று கூறிய நிலையில் ஆளுநர் மாளிகை கடிதத்தை பெற்றுக்கொண்டதற்கான acknowledgement ஐ அனுப்பி உள்ளது என்ற ஆதாரத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.
-
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம்












Click it and Unblock the Notifications