ஆளுநர் ரவியின் ஆக்சன்.. என்னது.. முதல்வர் கிட்ட சொல்லாம நடந்ததா? கல்வெட்டால் கிளம்பிய புதிய பூதம்!
சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் திமுக தரப்பிற்கும் ஆளுநர் ஆர். என் ரவிக்கும் இடையில் பல்வேறு விவகாரங்களில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டுள்ளது. நீட் விவகாரத்தில் தொடங்கிய மோதல் தேசிய கல்விக்கொள்கை, இந்தி மொழி திணிப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் விரிவடைந்து இருக்கிறது... தற்போது கல்வெட்டு விவகாரம் ஒன்றிலும் சர்ச்சை வெடித்து இருக்கிறது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று ஆளுநர் ரவி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து கொடுத்தார். வழக்கமாக கொடுக்கப்படும் இந்த விருந்தில் நேற்று திமுக கலந்து கொள்ளவில்லை.
ஆளும் திமுக மட்டுமின்றி திமுக கூட்டணியில் இருக்கும் கூட்டணி கட்சிகளான விசிக, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இந்த விருந்தை புறக்கணித்தன.

ஆளுனர் ரவி
ஆளுனர் ரவி தமிழ்நாடு அரசு கொண்டு வரும் மசோதாக்களை மதிக்கவில்லை. 8 கோடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் நிறைவேற்றும் மசோதாவை அவர் ஏற்காமல் இருப்பது சரியல்ல. இரண்டு முறை நீட் மசோதாவை அனுப்பியும் அதை ஆளுநர் ஏற்கவில்லை. இது தவறு. அதனால் தமிழக மக்களின் கருத்துக்கு எதிராக இருக்கும் ஆளுநர் விருந்தை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று திமுக இதற்கு காரணம் தெரிவித்துள்ளது.

மகாகவி பாரதி
இந்த நிலையில்தான் நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி மகாகவி பாரதியாரின் முழு உருவச் சிலையை ஆளுநர் மாளிகையில் திறந்து வைத்தார். மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி டாக்டர் எல். முருகன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த சிலையின் கல்வெட்டில் திறந்து வைப்பவர் ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதே சமயம் நிகழ்வில் முன்னிலை வகிப்பவர் என்ற இடத்தில் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆளுநர் மாளிகை
அதாவது இந்த நிகழ்வில் ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டி இருந்துள்ளது. ஆனால் முதல்வர் கலந்து கொள்ளாமல் இணை அமைச்சர் முருகன் மட்டுமே நிகழ்வில் கலந்து கொண்டார். இதுதான் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிந்தே இந்த கல்வெட்டு அடிக்கப்பட்டதா அல்லது கல்வெட்டு அடிக்கப்பட்ட பின் நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துவிட்டாரா, கல்வெட்டில் பெயர் இருந்தும் அவர் ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

புறக்கணிப்பு
இந்த கல்வெட்டு விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஆளும் தரப்பில் விசாரித்த போது.. முதல்வரிடம் சொல்லாமல் கல்வெட்டு அடிக்கப்பட்டு இருக்கலாம் என்று சிலர் பேசி வருகிறார்கள். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை. சிலை திறக்கிறோம் என்று கண்டிப்பாக முதல்வருக்கு அழைப்பு சென்று இருக்கும். தேநீர் விருந்தை புறக்கணித்த முதல்வர் அதே நாளில் நடக்கும் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வது சரியாக இருக்காது.
Recommended Video

இதுதான் காரணம்
இதனால் அந்த நிகழ்வையும் புறக்கணிப்பதாக முதல்வர் அறிவித்து இருப்பார். இதன் காரணமாக அவர் நிகழ்வில் கலந்து கொண்டு இருக்க மாட்டார். இருந்தாலும் மரியாதைப்படி அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கும். அதன்படியே கல்வெட்டும் அடிக்கப்பட்டு இருக்கும் என்று கூறி உள்ளனர். அனைத்து விஷயங்களும் முதல்வருக்கு தெரிந்தே, அவரிடம் சொல்லப்பட்டே நடந்து இருக்கும். கல்வெட்டை கடைசி நேரத்தில் மாற்ற முடியாது என்பதால் அதையே பயன்படுத்தி உள்ளனர் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications