மனோஜ் பாரதிராஜாவின் மனைவியை தெரியுமா? கேரளத்து ஹீரோயின்! யார் இந்த நந்தனா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனோஜ் பாரதிராஜாவின் மனைவி யார் என தெரியுமா? கேரளாவை சேர்ந்த அவரும் ஒரு நடிகைதான். இருவருக்கும் படப்பிடிப்பில் காதல் ஏற்பட பெரியவர்கள் சம்மதத்துடன் கேரளாவில் இவர்களது திருமணம் நடந்தது. அந்த நடிகை நந்தனா! இவர் ஏபிசிடி, சாதுரியன் என்ற படங்களில் நடித்துள்ளார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பால் இன்று மாலை காலமானார். இவர் 1999ம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய தாஜ்மகால் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் சமுத்திரம், கடல் பூக்கள் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.

Manoj Bharathiraja

ஆனால் தாஜ்மகால் வாங்கி கொடுத்த கொஞ்ச நஞ்ச பெயரை கூட மற்ற படங்கள் மனோஜுக்கு வாங்கிக் கொடுக்கவில்லை. அவருக்கு வாய்ப்புகளும் வரவில்லை. 2023 ஆம் ஆண்டு வெளியான மார்கழி திங்கள் மூலம் இவர் இயக்குநராகவும் அறிமுகமானார்.

இந்த நிலையில் சாதுரியன் என்ற படத்தில் நடிக்கும் போது தன்னுடன் நடித்த நடிகை நந்தனாவுக்கும் அவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இவர்கள் ஏற்கெனவே நண்பர்கள் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டியதை அடுத்து நந்தனாவின் சொந்த ஊரான கோழிக்கோட்டில் இவர்களது திருமணம் 2006 ஆம் ஆண்டு நடந்தது.

Manoj Bharathiraja

நந்தனா கேரளத்து பெண்! இதனால் அங்கு அவர்கள் முறைப்படி நடந்தது. இதையடுத்து சென்னையில் இருவருக்கும் வரவேற்பை பாரதிராஜா நடத்தினார். நந்தனா- மனோஜ் தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் ஆர்த்திகா, மதிவதனி ஆகியோர் ஆவர். திருமணத்திற்கு பிறகு நந்தனா நடிக்கவில்லை. கணவரின் தயாரிப்பு நிறுவனத்தில் அவருக்கு உதவியாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

Manoj Bharathiraja

மூத்த மகள் ஆர்த்திகா இயக்குநராக வேண்டும் என ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. இளைய மக்கள் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த மாதம்தான் மனோஜுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டது. இதையடுத்த படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்தாராம். இன்று மாலை 6 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மயங்கினாராம். அவரை சிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

Manoj Bharathiraja
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+