ஹனிமூன் போன இடத்துல புரட்சி பேசிய இளைஞர்.. ஓபனாக உடைத்து பேசிய பெண்.. வீடியோ பாருங்க
சென்னை: மணாலிக்கு ஹனிமுன் போன இடத்தில் தன் மனைவியிடம் இளைஞர் ஒருவர் விவசாயம் குறித்து புரட்சி பேசியிருக்கிறார். விவசாய குறித்து புரட்சி பாடத்தை கேட்டு கோபம் அடைந்த மனைவி அதனை நீயா நானா விவாத நிகழ்ச்சியில் இப்படி எல்லாம் செய்தார் என்று ஓபனாக உடைத்து பேசியுள்ளார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஹனிமூன் என்பது வாழ்வில் முக்கியமான மிக மகிழ்ச்சியான நாட்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தேன் நிலவு காலத்தில் கணவன் மனைவி தாம்பத்தியம் என்பதை தாண்டி, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் காலமாகவும் உள்ளது. கணவன் மனைவியின் விருப்பு வெறுப்புகளை அறியவும், மனைவி கணவனின் விருப்பு வெறுப்புகளையும் அறியவும் ஹனிமூன் காலம் உதவுகிறது.

பொதுவாக ஹனிமூன் சென்றால், மனைவியிடம் ஜாலியாக பேசுவார்கள், சிலர் கொஞ்சி கொஞ்சி பேசுவார்கள். சிலர் மனைவிக்கு பரிசு மழை பொழிவார்கள்.. விரும்பியதை எல்லாம் வாங்கி தருவார்கள். பிடித்த இடங்களில் காதலியுடன் சுற்றுவார்கள். இயற்கை அழகா, அவருடைய மனைவி அழகா என்று அவர்களுக்கே சந்தேகம் வரும் அளவிற்கு ஹனிமூனை கொண்டாடி தீர்ப்பார்கள்.
ஒருசிலர் இருக்கிறார்கள்.. ஹினிமூனில் போய் தங்கள் சிந்தனைகளை எல்லாம் அப்படியே மனைவியிடம் பேசுவார்கள். சிலருக்கு ஒரு குணம் இருக்கும்.. மற்றவர்களுக்கு பிடிக்கிறதோ.. பிடிக்கதோ, மணக்கணக்கில் தனக்கு தோன்றிய அத்தனை விஷயங்களையும் பேசுவார்கள். அதுவும் காரல் மார்க்ஸ் புரட்சி தொடங்கி, விவசாயிகள் பாடம் வரை பல பாடங்களை பேசுவார்கள்..
Honeymoon போன இடத்துல புரட்சி பேசியிருக்கான்@suguvanan9313 pic.twitter.com/9vIYhq6kAz
— Haraappan (@haraappan) May 16, 2024
சிலர் அதிமுகவில் இருந்து ஆரம்பித்து, திமுக, பாஜக, பாமக, விசிக என ஒவ்வொரு அரசியல் கட்சிகள் குறித்தும் தங்களுக்கு தெரிந்த அல்லது தாங்கள்புரிந்து கொண்ட அத்தனை கருத்துக்களையும் பேசுவார்கள்.. அவர்களுக்கு பொது அறிவை கூட்டுவதாக நினைத்து அறுத்து தள்ளிவிடுவார்கள்.. அப்படி பேசுவதை கேட்டு ஆமாம் என்று சொல்வதற்கு மட்டும் ஒரு ஆள் கிடைத்தால் போதும்.. அவர்களை கொண்டாடுவார்கள்..
அதேபோல் தான் சிலர் ரஜினி தொடங்கி, கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என நடிகர்கள் அத்தனை பேர் குறித்து விதவிதமான கதைகளை கூறிக்கொண்டே இருப்பார்கள். அந்த கதை குறித்து எதிர் கேள்வியே கேட்காமல் ஆமோதிப்பவர்கள் அமைந்துவிட்டால் அதுதான் சிறந்த நட்பு கூட்டணியாக இருக்கும்.
ஆனால் காதல் வாழ்க்கையிலோ அல்லது கல்யாண வாழ்க்கையிலோ இப்படியான உறவுகள் அமையவே அமையாது என்றே சொல்லலலாம்.. அப்படி அமைந்தால் லட்சத்தில் அல்ல.. கோடியில் ஒருவருக்கு தான் அமையும்.. மற்றபடி கணவனின் பேச்சை இரண்டு நிமிடம் கூட தாங்க முடியாத மனைவியும், ஒரு நிமிடம் கூட மனைவியின் பேச்சை தாங்க முடியாத கணவன்களுமே ஜோடியாக அமைக்கிறார்கள்.. அப்படியே அமைந்தாலும் அவர்கள் காதுகள் பாவமில்லையா என்றே கேட்கே தோன்றும்..
சரி விஷயத்திற்கு வருவோம்.. மணாலிக்கு ஹனிமுன் போன இடத்தில் தன் மனைவியிடம் இளைஞர் ஒருவர் விவசாயம் குறித்து புரட்சி பேசியிருக்கிறார். இதுபற்றி அந்த பெண் தனியார் தொலைக்காட்சியின் நீயா நானா விவாத நிகழ்ச்சியில் பேசுகையில், நாங்கள் மணாலிக்கு ஹனிமூன் போயிருந்தோம்.. என் கணவருடையஅக்காவின் வீட்டுக்காரர்..அந்த அண்ணா வந்து என்னிடம் சொன்னார்.. அந்த வழியாக வராதீங்கமா.. ஏதோ ஸ்டிரைக் போய்கிட்ட இருக்காம் என்றார்.. அப்போது தான் சார் என் கணவர் காரில் ஆரம்பித்தார்..
எதனால் விவசாயிகள் ஸ்டிரைக் பண்றாங்க தெரியுமா.. எந்த பாலிசி கொண்டு வந்தாங்க தெரியுமா.. அது நமக்கு எவ்வளவு பிரிச்சனை ஆயிருக்கு தெரியுமா? என்று கேட்டார்.. எனக்கு எதுவுமே தெரியாது.. தெரியாது என்று சொன்னால்.. தெரிஞ்சுக்கோ.. இதெல்லாம் தெரிஞ்சுக்கோ.. அந்த மொத்த பாலிசியையும்.. மணாலி வர்ற வரைக்கும் சொல்லிட்டாரு.." என்று அந்த இளம் பெண் தனது கருத்தை வெளிப்படுத்தினார். அதற்கு பதில் அளித்த கணவன்.. எதற்கு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.. அதற்காக கூறினேன்.. " என்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications