சென்னை முகப்பேரில் அந்தபுரமாக மாறிய அடுக்குமாடி.. போலீஸை கண்டு மின்னல் வேகத்தில் தாவி ஓடிய பெண்கள்
சென்னை: சென்னை முகப்பேரில் அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்த நிலையில், அதன்பேரில் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது போலீஸ் வருவதை அறிந்த பெண்கள், திடீரென முதல் தளத்தில் தாவி குதித்து தப்பி ஓட முயன்றனர். அப்படி குதித்த பெண் ஒருவருக்கு இரண்டு கால்களும் முறிந்து போனது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர விபசார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில வாரங்களாகவே சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, விடுதிகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று சென்னை முகப்பேரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சென்னை பெருநகர விபசார தடுப்பு பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது விபச்சாரம் நடக்கும் இடத்திற்கு போலீசார் வருவதை கண்ட 3 பெண்கள் முதல் தளத்தில் இருந்து குதித்ததுடன், அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதில் ஒரு பெண்ணுக்கு இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்த 3 பெண்களையும் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சாலிகிராமத்தை சேர்ந்த பேன்சி (வயது 52) மற்றும் மதுரவாயலை சேர்ந்த அழகேஷ்வரி (41) ஆகியோர் 3 பெண்களையும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து விபசாரத்தில் ஈடுபடுத்தபட்ட 3 பெண்களையும் போலீசார் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அதில் காயமடைந்த பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபச்சாரத்தில் பெண்களை தள்ளிய பேன்சி, அழகேஷ்வரி இருவரையும் கைது செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு சென்னை சாலிகிராமத்தில் ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த அசாம் இளைஞரை விபசார தடுப்பு பிரிவு உதவி போலீசார் கைது செய்தனர்.
சாலிகிராமம் காந்திநகர், பெரியார் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அடிக்கடி இரவு நேரங்களில் வாலிபர்கள் பலர் வந்து செல்வதாக அந்த குடியிருப்பில் வசித்து வரும் குடியிருப்புவாசிகள், விபசார தடுப்பு பிரிவுக்கு கடந்த வாரம் தகவல் அளித்தனர். இதன்பேரில் தடுப்பு பிரிவு-1 இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார், சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் திடீரென அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.
அப்போது, அசாம் மாநிலத்தை சேர்ந்த பாலியல் புரோக்கர் ராகுல் (எ) சஞ்ஜிப் ராய் (22) என்பவர், ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதியானது. இதையடுத்து உடனே போலீசார் சஞ்ஜிப் ராயை கைது செய்தனர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இளம்பெண் ஒருவரை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications