தமிழக கல்லூரிகளில் மாணவர் காங்கிரஸ் அமைப்பு! கட்சி வளர்ச்சிப் பணிகளில் திடீர் விறுவிறு!
சென்னை: தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர் காங்கிரஸ் அமைப்பை நிறுவும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்காக மண்டலம் வாரியாக பொறுப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர்களை கடந்த 4ஆம் தேதி டெல்லிக்கு அழைத்துப் பேசி மல்லிகார்ஜுனே கார்கே, ராகுல், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் தமிழகத்தில் காங்கிரஸின் நிலைமை குறித்து மிகுந்த அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். அண்ணாமலை வருகைக்கு பிறகு பாஜக துடிப்புடன் செயல்படுவதை சுட்டிக்காட்டிய அவர்கள் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கான பணிகளில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினர்.

இந்நிலையில் தான் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி மாற்றம் என்ற தகவல் கடந்த வாரம் முழுவதும் றெக்கை கட்டை பறந்தது. கே.எஸ்.அழகிரி இடத்தை பிடிக்கப்போவது செல்வப்பெருந்தகையா, ஜோதிமணியா, சசிகாந்த் செந்திலா என விவாதங்கள் எழுந்தன. இந்தச் சூழலில் தமிழகத்தில் மாணவர் காங்கிரஸை வலிமைப்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார் அதன் தலைவர் சின்னத்தம்பி.
சென்னை, திருவளூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர், கோவை,திருச்சி, மதுரை, தஞ்சை, கன்னியாகுமரி, திண்டுக்கல் என 11 மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்துள்ள சின்னத்தம்பி, கல்லூரிகளில் மாணவர்களை சந்தித்துப் பேசி மாணவர் காங்கிரஸ் அமைப்பை வலிமைப்படுத்தும் பணிகளை ஒப்படைத்துள்ளார்.
தமிழக மாணவர் காங்கிரஸ் மாநிலத் தலைவராக உள்ள சின்னத்தம்பியை பொறுத்தவரை மாணிக்கம்தாகூர் எம்.பி.யின் ஆதரவாளராவார். இந்த யோசனைக் கூட மாணிக்கம் தாகூர் கொடுத்ததாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications