ராட்சச பந்து போல வானில் வருது.. சூப்பர்மூன் அதிசய நிகழ்வு.. இன்று அறுவடை முழு நிலவு.. டைமிங் பாருங்க
சென்னை: பிரபஞ்சத்தின் அதிசயங்கள் தினம் தினம் நடந்து கொண்டிருக்கின்றன.. அந்தவகையில், மிகப்பெரிய அதிசயம் இன்றைய தினம் வானில் நிகழ போகிறது.. இந்த அதிசயத்தை பார்ப்போர் நிச்சயம் பிரமிப்பை அடைவார்களாம்.. காரணம், சூப்பர் மூன் இன்று இருளில் நடக்க போகிறது.. இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள் சொல்வதென்ன? சூப்பர் மூன் என்று அழைக்கப்பட காரணம் என்ன? அறுவடை முழு நிலவு என்று சொல்வதற்கு என்ன காரணம்? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
பூமிக்கும், நிலவுக்கும் இடையிலான சராசரி தூரம் 3.84 லட்சம் கி.மீட்டராகும்.. பூமியை நிலவு ஒருநாள் சுற்றி வருவதற்கு 27 நாட்கள் ஆகிறது. இதில் அதிகபட்சமாக 4.06 லட்சம் கி.மீ. தூரத்திலும், குறைந்தபட்சமாக 3.56 லட்சம் கி.மீ. தூரத்தில் இருந்தும் நிலவு, பூமியை சுற்றி வருகிறது.

சூரியன், பூமி, சந்திரன்
இதில், சூரியனும், பூமியும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரும்போது நிகழ்வதே சந்திர கிரகணமாகும். பூமி, சூரிய ஒளியை நிலவின் மீது விழாமல் தடுப்பதால், நிலவு சிவப்பு நிறமாக தோன்றும்..
முழுமையான சந்திர கிரகணத்தின்போது சந்திரன் சிவப்பு நிறமாக மாறுவதற்கு ரேலீ சிதறல் அடித்தள காரணமாக அமைகிறது. சூரியன் உதிக்கும்போதும், மறையும்போதும் சிவப்பு நிறத்தில் காணப்படும்.. எனவேதான் இதனை சிவப்பு நிலவு, ரத்த நிலவு என்று வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
வானில் அதிசயம் - சூப்பர் மூன்
பூமியின் மைய இருண்ட பகுதியான அம்ப்ரா நிலவை மறைக்க துவங்கி முழுமை அடையும்போது சந்திரன் சிவப்பு நிறமாகு ஒளிரும். அந்தவகையில், கடந்த செப்டம்பர் 7ந்தேதி முழு சந்திர கிரகணம் நடந்தது.. இரவு 8.58 மணிக்கு ஆரம்பித்து, மறுநாள் விடிகாலை 2.25 மணி நடந்தது.. இதுதான் சமீபத்திய வருடங்களிலேயே மிக நீண்ட கிரகணங்களில் ஒன்றாக கருதப்பட்டது.
இந்நிலையில், மற்றொரு அதிசயம் இன்றைய தினம் சூப்பர் மூன் (Supermoon) வானில் நடைபெற உள்ளது.. இரவு 11:48 மணிக்கு உச்சபட்ச பிரகாசத்தை நிலவு அடைய போகிறதாம்.. அதன்படி, இன்று முழுமையான நிலவு வழக்கத்தைவிட பெரியதும், பிரகாசமானதாகும்.. அதாவது 14% பெரியதாகவும், 30% அதிக பிரகாசத்துடனும் வானில் தென்படும். இதற்குதான் சூப்பர் மூன் என்கிறார்கள்.. இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூன் இதுவாகும்..
1979ல் வானியல் நிபுணர் ரிச்சர்டு நூலே என்பவர், சூப்பர் மூன் என்ற பெயரை அறிமுகப்படுத்தினார்.
ராட்சச பந்து - பெரிய சைஸ் நிலவு
நிலவு உதித்த 1 மணி நேரத்திற்கு, பூமியின் வளிமண்டலம் நீல ஒளியை சிதறடிப்பதால், அது அடர்ந்த ஆரஞ்சு நிறத்தில் தோன்றும்.. நிலவு முழு பௌர்ணமியாக இருக்கும்போது, அதன் சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது, இந்த தற்செயல் நிகழ்வு ஏற்படுகிறது.. இதற்கு சூப்பர் மூன் பெரிஜி (Perigee) என்கிறார்கள்.
பூமிக்கு மிக அருகில் வரும்போது, வழக்கத்தை விடப்பெரியதாகவும், பிரகாசமாகவும் ராட்சச பந்துபோல நிலவு தென்படுகிறது.. இதனை டெலஸ்கோப் மூலம் பார்க்க தேவையில்லை.. இன்று வானம் இருட்டியதுமே, வெறும் கண்ணால் பார்த்தால் போதும்.
அறுவடை முழு நிலவு
இந்த சூப்பர் மூன் சராசரியைவிட சற்று பெரியதாகவும், பிரகாசமாகவும் தோன்றும் என்று நாசாவும் தெரிவித்துள்ளது.
இந்த சூப்பர் மூனுக்கு "அறுவடை முழு நிலவு" (Harvest Moon) என்று மற்றொரு பெயரும் உள்ளது.. இதற்கு காரணம், இந்த முழு நிலவின் ஒளியில், விவசாயிகள் இருட்டிய பிறகும் பயிர்களை சேகரிக்க முடியுமாம். அதனால்தான், விவசாய நாட்டுப்புற கதைகளில் இருந்து அறுவடை முழு நிலவு என்று புனைப்பெயர் வந்ததாக சொல்வார்கள்.
நவீன விவசாயத்தில் இப்போது நிலவொளியை நம்பியில்லை என்றாலும், அறுவடை முழு நிலவு என்ற பெயர் இன்னும் நாட்டுப்புறக் கதைகளில் நீடித்து வருகிறது.
பொதுவாக, பவுர்ணமி நாளில் "சூப்பர் மூன்" ஏற்படும். ஆனால் அனைத்து பவுர்ணமியிலும் "சூப்பர் மூன்" நடப்பதில்லை.. எனவே, வரும் நவம்பர் 7ம் தேதி மற்றும், டிசம்பர் 4ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications