24 மணி நேரமும் தியேட்டர்களுக்கு அனுமதி.. கட்டணமும் உயர்த்தனும்.. தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை
சென்னை: அண்டை மாநிலங்களில் 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி உள்ளது. அதேபோல தமிழ்நாட்டிலும் இதே போன்று அனுமதி தர வேண்டும். திரையரங்குகளில் இத்தனை காட்சிதான் என்று கட்டுப்பாடு இல்லாமல் படங்களை திரையிட அனுமதி அளிக்க வேண்டும். என்று தியேட்டர் உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தியேட்டர்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தியேட்டர்களின உரிமையாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இன்றி 24 மணி நேரமும் திரையரங்குகளில் படத்தை திரையிட அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் வருமாறு:-

* திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10 சதவிகிதம் வசூலிக்க அனுமதி தர வேண்டும்.
* மல்டி பிளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ. 250 வரையும் , ஏசி திரையரங்குகளுக்கு ரூ.200 வரையும், ஏசி இல்லாத திரையரங்குகளுக்கு ரூ. 150 வரையும் என்று கட்டணம் நிர்ணயித்துக் கொடுக்க வேண்டும்.
* பக்கத்து மாநிலங்களில் 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி உள்ளது. அதேபோல தமிழ்நாட்டிலும் இதே போன்ற அனுமதி தர வேண்டும்.. திரையரங்குகளில் இத்தனை காட்சிதான் என்று கட்டுப்பாடு இல்லாமல் படங்களை திரையிட அனுமதி அளிக்க வேண்டும்..
* ஆபரேட்டர் லைசன்ஸ்சிக்கு புதிய வழிமுறையை வகுத்து தந்தீர்கள்.. அது தெளிவாக இல்லாததால் அதை வைத்து எந்த பலனும் நாங்கள் அடையவில்லை. எனவே, அதை மாற்றி நாங்கள் கேட்டது போல ஆபரேட்டர் லைசன்ஸ் தேவையில்லை அல்லது எளிய முறையில் ஆபரேட்டர் லைசன்ஸ் தரும்படி கோரிக்கை வைக்கிறோம்.
* மால்களில் உள்ள திரையரங்குகளில் கமர்ஷியல் ஆக்டிவிட்டிக்கு அனுமதி வழங்கியது போல, மற்ற திரையரங்குகளுக்கும் கமர்ஷியல் திரையரங்குகளுக்கும் அனுமதி தர வேண்டும்.
* மின் கட்டணத்தை எம்.எஸ்.எம்.இ -விதிகளை பின்பற்றி திரையரங்குகள் எம்.எஸ்.எம்.இ யின் கீழ் வருவதால் அந்த விதிப்படி எங்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆகிய கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications