தியேட்டர் ஓனர் To எம்எல்ஏ..ரேவந்த் சரணுக்கு பெரிய பொறுப்பைக் கொடுத்த சிஎம் விஜய்! சிஎம்டிஏ-வில் பதவி
சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் புறநகர் பகுதி வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும் சென்னை பெரு நகர வளர்ச்சி குழுமத்தின் (சிஎம்டிஏ) உறுப்பினராக மதுரவாயல் தொகுதி எம்எல்ஏவும் ரோகிணி திரையரங்கின் உரிமையாளருமான ரேவந்த் சரண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ரோகணி திரையரங்கின் உரிமையாளர் என்பதோடு, பாஜக பிரபலமான வினோஜ் பி.செல்வத்தின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று முதல்வராக விஜய் பதவி ஏற்றிருக்கிறார். தொடர்ந்து சிறுபான்மை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள், ஆணையங்கள், அமைப்புகளுக்கு திமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட தலைவர்கள், உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
தொடர்ந்து அந்த பதவிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்களும், முதலமைச்சர் விஜய்க்கு நெருக்கமான தொழில் துறையைச் சேர்ந்தவர்களும், திரையுலக பிரபலங்களும் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.

ரேவந்த் சரண்
ஏற்கனவே தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக தவெக பேச்சாளர் லயோலா மணி, சிறுபான்மை ஆணையத் தலைவராக தவெக செய்தித் தொடர்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு, இந்து சமய அறநிலைய துறை அறங்காவலர் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட பலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் உறுப்பினராக தமிழக வெற்றிக் கழக நிர்வாகியும், மதுரவாயல் தொகுதி எம்எல்ஏவுமான ரேவந்த் சரண் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம்
சென்னை மட்டுமல்லாது அதன் புறநகர் பகுதிகளில் வளர்ச்சியை மேம்படுத்து பொறுட்டு சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த குடும்பத்தின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 4 மாநகராட்சிகளும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 12 நகராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 6 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நிலப் பயன்பாடு, கட்டுமானங்களுக்கு அனுமதி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மூலம் தான் வழங்கப்பட்டு வருகிறது.
சிஎம்டிஏ
1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிஎம்டிஏ அமைப்பு 54 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் இந்த அமைப்பின் நிதிநிலை மோகம் மோசமாக இருப்பதாக தொடர் புகார்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் உறுப்பினராக ரேவந்த் சரண் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்திருக்கிறார் ரேவந்த் சரண்.
ரோகினி தியேட்டர்
2024 நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்தபோது மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள், திரைத்துறையினர், தொழிலதிபர்கள் என பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அப்படி திரை தொழிலதிபர்களின் ஒருவர் தான் ரேவந்த் சரண். சென்னையில் பிரபலமான ரோகினி தியேட்டரின் உரிமையாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வினோத் பி செல்வம்
விஜயின் தீவிர ரசிகராக இருந்த ரேவந்த் சரண் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பின்னர் மதுரவாயில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் சென்னை மண்டல வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளராகவும் இவர் செயல்பட்டு வருகிறார். மேலும் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் நிர்வாகிகளில் ஒருவரான வினோத் பி செல்வத்தின் சகோதரர் தான் ரேவந்த் சரண் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
