அப்பாடா.. 8 மாதங்களுக்கு பிறகு.. தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு.. ஆனால் புதுப்படம் இல்லை!
இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகின்றன
சென்னை: கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகு, தமிழகத்தில் இன்று முதல் தியேட்டரகள் திறக்கப்பட உள்ளன.. புதுப்பட ரீலீஸ் எதுவுமே இல்லாத நிலையில், மெகா ஹிட் படங்களான சிவாஜி, மெர்சல், விஸ்வாசம், பாபநாசம் போன்ற படங்கள் மறுபடியும் திரையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தியேட்டர்களை எல்லாம் மூட முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.. அதன்படி இந்த 8 மாசமாக எல்லா தியேட்டர்களும் மூடியே உள்ளன.

நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்... அதன்படி 50% இருக்கைகளுடன் தியேட்டர்களும் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
மேலும், விபிஎப் கட்டணம் செலுத்த எதிர்ப்பு தெரிவித்து புது திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாது என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது . அதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் படத்தின் வசூலில் 50% -ஐ அளித்தால் விபிஎப் கட்டணத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.
இந்த விபிஎப் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்தை, நடந்து வந்த நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பரமணியம், தமிழகத்தில் திரையரங்குகள் வரும் 10-ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் திறக்கப்படும் என்றும், தியேட்டரில் தங்களிடம் உள்ள பழைய வெற்றி திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அதன்படி 8 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்படவுள்ளதன.. வெறும் 50 சதவீத சீட்கள்தான் செயல்பட இருக்கிறது.. தியேட்டருக்கு செல்லும் அனைவரும் மாஸ்க் அணிந்து கொண்டு செல்ல வேண்டும், சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்பன உட்பட வழிகாட்டு நெறிமுறைகளுடன் தியேட்டர்கள் இன்றுமுதல் இயங்க உள்ளன.

ஆனால் அங்கு, நொறுக்கு தீனிக்கு தடை உள்ளது. அதேபோல, புதுப்பட ரீலீஸ் எதுவுமே இல்லாதால், வசூலில் வாரி குவித்த ஹிட் படங்களையே திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளன.. அந்த வகையில் மெர்சல், சிவாஜி, விஸ்வாசம், பாபநாசம், அசுரன், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஓ மை கடவுளே உட்பட பல படங்கள் திரையிட உள்ளதாக சொல்லப்படுகிறது.
விபிஎப் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்த விரைவில் முடிந்து புது படங்கள் ரீலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... வழக்கமாக தீபாவளிக்கு புது படங்கள் ரிலீஸ் ஆகும் நிலையில், இந்த முறை எந்த புது படமும் இல்லாமல் தீபாவளியை ரசிகர்கள் கடந்து போக உள்ளனர்..!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications