ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் கைவரிசை.. இரும்பு கம்பிகளை திருடி ‘கம்பி’ நீட்டிய மர்ம கும்பல்!
சென்னை: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடு கட்டுவதற்காக வாங்கி வைத்திருந்த இரும்பு கம்பிகள் உள்ளிட்ட 1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் அபேஸ் செய்துள்ளனர்.
சென்னை அசோக் நகர் 11-வது அவென்யூவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராகவன் (76) என்பவர் வசித்து வருகிறார். இவர் வசித்து வரும் வீட்டில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக இரும்பு கம்பிகள், பித்தளை பொருட்கள் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாங்கி வீட்டின் மூன்றாவது தளத்தில் வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 29ஆம் தேதி அந்த பொருட்கள் திருடுபோயுள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையை தொடங்கிய போலீசார் முதற்கட்டமாக அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் துப்பு துலக்கி வருகின்றனர். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications