Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“சமஸ்கிருதம் திணிப்பு”..தமிழில் கோயில் குடமுழுக்கு நடத்த முதல்வருக்கு தெய்வீக பேரவை ஆதீனங்கள் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் திருக்கோயில்கள், மடங்கள் மற்றும் தனியார் கோயில்களில் தமிழில் குடமுழுக்கு விழாக்களை நடத்துவதற்கு உரிய வழிகாட்டுதலையும் உத்தரவையும் வழங்க 6 ஆதீனங்களை கொண்ட தெய்வீகப் பேரவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளது.

அதில் மொத்தம் 18 புள்ளிகளுடன் ஏராளமான கோரிக்கைகளை குன்றக்குடி ஆதீனம், மதுரை ஆதீனம், மயிலை ஆதீனம், பேரூராதீனம், சிரவை ஆதீனம், காமாட்சிபுரி ஆதீனங்களை கொண்ட தெய்வீகப் பேரவை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு எழுதி இருக்கிறது.

அதில் "மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி தமிழ்வழியில் திருக்குட நன்னீராட்டு செய்ய உரிய வழிகாட்டுதல் மற்றும் உத்தரவுகள் வழங்கக் கோருதல் தொடர்பாக.

ஆயிரக்கணக்கான கோயில்கள்

ஆயிரக்கணக்கான கோயில்கள்

1. தமிழகத்தில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழும், பல்வேறு சைவ, வைணவ திருமடங்களின் கீழும், அறக்கட்டளைகள் மற்றும் தனியார் மூலமும் ஆயிரக்கணக்கான திருக்கோவில்கள் உள்ளன.

2. மேற்கண்ட கோவில்களில் தினசரி வழிபாடுகள் பெருவிழாக்கள் என அனைத்தும் நடைபெற்று வருகின்றன.

புராண கால கோயில்கள்

புராண கால கோயில்கள்

3. தமிழகத்தில் வழிபாடுகள் நடைபெற்று வரும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழுள்ள திருக்கோவில்களும், திருமடங்கள் மூலம் நிர்வகிக்கப்படும் கோவில்களும் பெரும்பகுதி புராண காலங்கள் மற்றும் பண்டைய தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டவை ஆகும்.

4. மேலும் பண்டைய காலங்களில் திருக்கோவில்களின் குடமுழுக்கு, விழாக்கள், பெருவிழாக்கள் அனைத்தும் தமிழ் முறைப்படியே நடைபெற்று வந்துள்ளது.

சமஸ்கிருதம் மாற்றப்பட்டது

சமஸ்கிருதம் மாற்றப்பட்டது

5. தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு வந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்தான் சமஸ்கிருதத்தை வழிபாட்டு மொழியாக சிறிது சிறிதாக மாற்றியுள்ளனர்.

6. கடந்த 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில், பின்னிட்டு கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் போன்ற திருக்கோவில்களில் வடமொழி வழிபாடுகளோ அல்லது பிற மொழி வழிபாடுகளோ நடைபெற்றதாக எவ்வித சரித்திரக் குறிப்புகளும் இல்லை.

தமிழ் மொழியில் வழிபாடு

தமிழ் மொழியில் வழிபாடு

7. மேலும் மேற்கண்ட கோவில்களின் குடமுழுக்கு விழாக்களும், சைவப் பெருந்தகைகளால் நடைபெற்றதாகத்தான் சான்றுகள் தெரிவிக்கின்றன. கருவூர்த்தேவர், நம்பியாண்டார் நம்பி போன்ற சைவப் பெருமக்கள் வடமொழியில் குடமுழுக்கு நடத்தியதாக எவ்வித சான்றுகளும் இல்லை.

8. எனவே சங்க காலம் தொட்டு, ஆண்டாண்டு காலமாக மூவேந்தர்கள் காலம் வரையும், தமிழக கோவில்களில் தமிழ்முறைப்படிதான் குடமுழுக்கு விழாக்கள், அன்றாட வழிபாடுகள், பெருவிழாக்கள் ஆகியவை தமிழ் முறைப்படிதான் நடைபெற்று வந்துள்ளன.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்

9. மேலும் வைணவத் திருத்தலமான திருமலை திருப்பதியில் கூட இன்று வரை நாலாயிரத்திவ்யப் பிரபஞ்சம்தான் வழிபாட்டுப் பாடலாக உள்ளது.

10. எனவே வடமொழி வழிபாடு என்பது வடமொழியில் குடமுழுக்கு நடத்துவதும், பின்னிட்டு பல்வேறு மன்னர்களின் படையெடுப்பில் ஊடுருவிய ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வடமொழியை தெய்வமொழி என்றும், இறைவன் மொழி என்றும் தவறாகச் சித்தரித்து வடமொழியின் ஆதிக்கத்தையும், ஆளுமையையும் முன்னெடுத்து விட்டனர்.

வடமொழி இறைமொழியா?

வடமொழி இறைமொழியா?

11. மேலும் தமிழ் மொழியின் சிறப்பை அறியாதவர்கள், வடமொழி என்பது இறைமொழி என தவறாகக் கருதிக் கொண்டு அவர்கள் பின்னால் அணிவகுத்து விட்டனர்.

12. எனவே தமிழ்மொழியின் சிறப்பையும், அதன் வழிபாட்டு முறைகளையும் பல பொதுத் தளங்களில் வெளிப்படுத்தி வருகிறோம்.

13. மேலும் தமிழ் மொழியின் சிறப்பிற்காக எம்பெருமான் சுந்தரரை தடுத்தாட்கொண்ட நிகழ்வும், மதுரையம்பதியில் போட்டிப்பாடகரை விரட்டி விடுவதற்காக இறைவனே வந்து பாடியதையும் பல்வேறு நூல் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

தமிழ் நூல்கள்

தமிழ் நூல்கள்

14. மேலும் தமிழ் வழிபாட்டு நெறிமுறைகளில் சிவபுராணம், பெரியபுராணம், திருமுறைகள், கந்தபுராணம், திருமுருகாற்றுப்படை என்று பல்வேறு நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

15. மேலும் திருக்குட நீராட்டு வழிபாடுகளில் நீரிலும், நெருப்பிலும் இறைவனை எழுந்தருளச் செய்வதும், விமான கலசத்தில் இறைவனைக் குடமுழுக்காற்றுவதும் எளிய தமிழில் நடைபெறுமானால் பாமர மக்களும் வழிபாடுகளில் தங்களை முழுமையாக அர்ப்பணிக்க வாய்ப்பாக அமையும்.

கைபர்போலன் கணவாய் வழியே வந்தவர்கள்

கைபர்போலன் கணவாய் வழியே வந்தவர்கள்

16. மேலும் விஜய நகரப் பேரரசிற்கும், முகலாயப் பேரரசிற்கும் இடைப்பட்ட காலத்திலேதான் வடமொழி வழிபாடுகள் இந்தியாவிற்குள் நுழைந்தது.

17. கைபர்போலன் கணவாய் வழியே பல்வேறு பணிகளுக்காக சிந்து சமவெளியில் இருந்து வந்த ஒரு குறிப்பிட்ட சமூகம்தான் வடமொழி வழிபாட்டைத் துவக்கி ஆண்டாண்டு காலமாக தமிழகத்தில் நடைபெற்று வந்த தமிழ்மொழி வழிபாட்டைப் புறந்தள்ளினார்கள்.

தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை

தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை

18. இச்சூழ்நிலையில் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தமிழகக் கோவில்களில் திருக்குடமுழுக்கு விழாவைத் தமிழ்மொழியில் நடத்துவதற்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.

எனவே தெய்வத்திருமொழியாம் தமிழ் மொழியில் தமிழகக் கோவில்களில் திருக்குடமுழுக்கு நடத்துவதற்கு தகுந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளையும், தகுந்த அரசாணையையும் பிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்." என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+