அப்போ ஜப்பான்.. இப்போ பெங்களூர்.. சரியாக ஸ்டாலின் இல்லாத நேரங்களில்.. நடக்கும் ரெய்டு.. ஷாக் பின்னணி
சென்னை: முதல்வர் ஸ்டாலின் பெங்களூர் செல்லும் நேரம் பார்த்து அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்துகிறது.
முதல்வர் ஸ்டாலின் இன்று பெங்களூர் பயணம் மேற்கொள்கிறார். காலை பெங்களூர் செல்லும் அவர் அங்கே நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார்.
24 எதிர்க்கட்சிகளுக்கு கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. நாளை வரை இந்த கூட்டம் நடக்க உள்ளது. தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.

கடந்த கூட்டத்தில் 14 கட்சிகள் பீகாரில் உள்ள பாட்னாவில் கலந்து கொண்ட நிலையில் இந்த முறை கூடுதல் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றன. காங்கிரஸ் கட்சி சார்பாக இந்த கூட்டம் கூட்டப்படுகிறது. ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இதில் பங்கேற்க முடிவு செய்துள்ளன. இன்று நடக்கும் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு க ஸ்டாலின், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, திருமாவளவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இது தவிர, சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே மற்றும் எம்பி சஞ்சய் ராவத் ஆகியோர் இந்த மிக முக்கியமான கூட்டத்தில் பங்கேற்பார்கள். இந்த நிலையில்தான் சரியாக முதல்வர் ஸ்டாலின் பெங்களூர் செல்லும் நேரம் பார்த்து அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்துகிறது.
முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் இதேபோல்தான் ஸ்டாலின் ஊரில் இல்லாத போது ரெய்டு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ஜப்பான் சென்ற தருணத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிரடி சோதனையை நடத்தியது வருமானவரித்துறை.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
பல்வேறு டெண்டர் முறைகேடுகளை செய்ததாக செந்தில் பாலாஜி மீது பாஜக, அதிமுக சார்பாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜி வீடுகளில் ஸ்டாலின் இல்லாத நேரம் பார்த்து வருமான வரித்துறை ரெய்டு செய்தது. இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில்தான் அதன்பின் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது.
இந்த நிலையில்தான் தற்போது முதல்வர் ஸ்டாலின் பெங்களூர் செல்லும் நேரம் பார்த்து அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்துகிறது. அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவர் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி எம்பி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது.
காலை 7 மணி முதல் 50 பேர் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது. விழுப்புரத்தில் உள்ள அமைச்சரின் வீட்டிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்படும் சோதனைக்கு என்ன காரணம் என்று அதிகார்பூர்வ விவரம் வெளியிடப்படவில்லை. என்ன வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடக்கிறது என்று அமலாக்கத்துறை கூறவில்லை.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications