"பாசிட்டிவ்".. ஷாக் ஆன ஓ.ராஜா.. வீட்டிலிருந்து வெளியிலேயே செல்லாத நிலையில் தொற்று வந்தது எப்படி?
ஓ.ராஜாவுக்கு மதுரையில் தீவிரமான சிகிச்சை தரப்பட்டு வருகிறது
சென்னை: தனக்கு கொரோனா "பாசிட்டிவ்" என்று ரிசல்ட் வந்ததுமே ஓ.ராஜா ஷாக் ஆகிவிட்டாராம்.. 4 நாளைக்கு முன்பே பெரியகுளம் வீட்டை ஓபிஎஸ் காலி செய்து விட்ட நிலையில், ஓ.ராஜா மட்டும் தொற்றில் சிக்கி கொண்டது பெரும் துயரத்தை ஏற்படுத்தி வருகிறது.
எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என ஒவ்வொருவராக தொற்று பாதித்து வருகிறது.. அவர்களுடன் சேர்த்து அவர்களின் குடும்பத்தாரையும் பாதித்து வருகிறது.. அந்த வகையில், துணை முதல்வர் தம்பி ஓ.ராஜாவும், தொற்று உறுதியான நிலையில், மதுரை அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
10 நாளைக்கு முன்புதான் துணை முதல்வர் பெரியகுளம் வந்திருந்தார்.. அப்போதே அங்கு தொற்று அதிகமாக பரவி வந்த காரணத்தால்தான் 21-ம் தேதியே பெரியகுளம் நகராட்சி பகுதிக்கு மட்டும், முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.

பெரியகுளம்
அதனால், சென்னையில் இருந்து தேனி வந்த ஓபிஎஸ், பெரியகுளத்தில் தங்காமல், 3 நாட்கள் தன்னுடைய தொகுதியான போடியில் ஒரு வாடகை வீட்டை எடுத்து தங்கினார் என்று சொல்லப்பட்டது.. அந்த அளவுக்கு அங்கு தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஓபிஎஸ்-ன் பழைய வீடு பக்கத்திலேயே ஓ.ராஜா வீடும் இருக்கிறது..

ஓ.ராஜா
இந்த சமயத்தில்தான் மொத்த பெரியகுளம் பகுதியையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.. ஒரு வீடு விடாமல் சோதனையை செய்ய ஆரம்பித்தனர். அப்போது, ஓ.ராஜாவுக்கும் 4 முறை டெஸ்ட் செய்யப்பட்டது.. ஆனால் நெகட்டிவ் என்றே ரிசல்ட் வந்துள்ளது.. இருந்தாலும் பெரியகுளத்தில் வைரஸ் பரவல் அதிகம் என்பதால், போடி அருகே இருக்கும் போடேந்திரபுரத்திற்கு தன் மாமனார் வீட்டுக்கு கடந்த வாரமே சென்றுவிட்டார்.

அதிர்ச்சி
இந்த நிலையில், அப்பகுதியில் வீடு வீடாக சென்று டெஸ்ட் செய்து வந்த அதிகாரிகள், ஓ. ராஜா வீட்டுக்கும் சென்று டெஸ்ட் செய்தனர்.. அப்போதுதான் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்திருக்கிறது.. இதை கேட்டு ஓ.ராஜா கடுமையான அதிர்ச்சி அடைந்துவிட்டாராம். உடனடியாக மதுரை அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதித்துவிட்டனர்.. தற்போது சிகிச்சையும் நடந்து வருகிறது.

உறுதி
இதில் வேதனை என்னவென்றால், அதே ஆஸ்பத்திரியில் ஓ. ராஜாவின் மனைவியும் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்... மேலும் 2 உறவினர்களுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.. அவர்களும் மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது யாரெல்லாம் ஓ.ராஜாவுடன் தொடர்பில் இருந்தார்கள் என்று ஆராயப்பட்டு, அவர்களை அதிகாரிகள் கண்டறிந்து தனிமைப்படுத்தி வருகிறார்கள்.

எப்படி பரவியது?
மேலும் ஓ.ராஜா தங்கியிருந்த போடேந்திரம்புரம் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.. ஆனால் கொரோனா ஆரம்பித்ததில் இருந்தே ஓபிஎஸ், ஓ ராஜா குடும்பத்தினர் வெளியே எங்குமே சென்று வராத நிலையில், எப்படி தொற்று பரவியது என்பதுதான் புரியவில்லை என்கிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications