உங்களுக்கு சேலஞ்ச்! இந்த படத்தில் ஒரு மிஸ்டேக் இருக்கு.. 7 செகண்ட் டைம்.. முடிந்தால் கண்டுபிடிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு தவறு உள்ளது. இதனை வெறும் 7 செகண்டில் உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால், உங்களது யோசிக்கும் திறன் அபாரமாக உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம்.

இணையத்தில் இப்போது ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் கண்கட்டி வித்தை படங்கள், புதிர்களுக்கு (Puzzles) நல்ல வரவேற்பு உள்ளது. எப்போதும் பரபரப்பாக இருந்துவிட்டு.. ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்கள்.. பயனுள்ள வகையில் பொழுது போக்கும் விதமாக இந்த படங்கள் இருப்பதால் பலரும் புதிர்களுக்கான விடையை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

There is a mistake in the given optical illusion picture If you find it in 7 seconds then you are great


பலரும் ஆப்டிகல் இல்யூஷன் படத்திற்கான விடையை கண்டுபிடிப்பதோடு, தங்கள் நண்பர்களுக்கும் அதை பகிர்ந்து... விடையை கண்டுபிடிக்கிறார்களா... என சோதிக்கிறார்கள். இப்படியாக இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் பரவி வருகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு மிஸ்டேக் உள்ளது. அது என்ன என்று கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கான சவால்.. அதுவும் 7 செகன்ட்ஸ்தான் டைம்.

இந்த படத்தை நன்கு உற்று பாருங்கள்.. நேர்முகத்தேர்வு ஒன்றிற்காக நான்கு பேர் காத்திருக்கிறார்கள். நேர்முகத்தேர்வில் என்ன கேள்வி கேட்பார்களோ என்ற பதற்றத்துடன் அமர்ந்து இருப்பது தெரிகிறது. இந்த படத்தில் தான் ஒரு தவறு உள்ளது. அது என்னவென்று கண்டுபிடித்தால் உண்மையாகவே நீங்கள் செம ஷார்ப்தான்.. என்ன உங்களுக்கான டைம் தொடங்கியது.. கண்டுபிடித்து வீட்டீர்களா..

குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடித்து இருந்தால் பாராட்டுக்கள்.. கண்டுபிடிக்கவில்லை என்றாலும் நாங்கள் சில டிப்ஸ் கொடுக்கிறோம். அதை வைத்து எளிதாக விடையை அறிந்து கொள்ளலாம். இந்த படத்தில் உள்ள தவறு அங்கு உள்ள எந்த பொருளிலும் இல்லை.. மாறாக நேர்முகத்தேர்வுக்கு அமர்ந்து இருப்பவர்களிடம் தான் கேள்விக்கான விடை உள்ளது...

உங்கள் கண்கள் ஷார்ப்பா.. வாங்க டெஸ்ட் பண்ணிடலாம்! 6 செகண்ட் டைம்.. படத்தில் சிங்கத்தை கண்டுபிடிங்க


எனவே சேர், டேபிள் உள்ளிட்டவற்றை ஆராய்வதை விட்டு விட்டு.. அவர்களின் உடை, கையில் வைத்திருக்கும் பொருட்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யுங்கள்.. படத்திற்கான விடையை கண்டுபிடித்து விடலாம். இப்பவும் கண்டுபிடிக்கல்லை என்றால் விடையை கீழே உள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

There is a mistake in the given optical illusion picture If you find it in 7 seconds then you are great

நேர்முகத்தேர்வுக்கு அமர்ந்து இருக்கும் பெண்ணின் ஸ்டாக்கிங்ஸ் வேறு வேறு கலரில் உள்ளது. இதுதான் படத்தில் உள்ள தவறு.. அட இதெல்லாம் ஒரு தவறாங்க..என நினைக்க வேண்டாம்.. நேர்முகத்தேர்வுக்கு இப்படி செல்ல முடியுமா? ... இந்த புதிர் படத்தை உங்கள் நட்பு வட்டாரத்திற்கும் ஷேர் செய்து அவர்கள் கண்டுபிடிக்கிறார்களா என சேலஞ்ச் கொடுத்து பாருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+