தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பில்லை.. குட் நியூஸ் சொன்ன மா.சுப்பிரமணியன்
சென்னை: தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பில்லை. குரங்கு அம்மை தொற்றை மத்திய அரசு சிறப்பாகக் கையாண்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த 1970 காலகட்டத்தில் பரவிய குரங்கு அம்மை பாதிப்பு அதன் பின்னர் கட்டுக்குள் வந்தது. தற்போது பல்வேறு நாடுகளில் இந்த தொற்று மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மை நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை சுமார் 450க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 32 பரிசோதனை மையங்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இதுவரை எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும், அண்டை நாடுகளில் பரவியுள்ளதால் முன்னெச்சரிக்கை பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. உடல் பலவீனம், வீங்கிய நிணநீர் முனைகள், தொண்டை புண், சொறி, காய்ச்சல், தசை வலி, முதுகு வலி ஆகியன குரங்கு அம்மையின் அறிகுறிகளாகும்.
இந்த அறிகுறிகள் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே உடலில் தென்பத் தொடங்கிவிடும். குறிப்பாக காய்ச்சல், தொண்டை புண், தலைவலி முதலிலேயே தென்படத் தொடங்கிவிடும். தொற்று பரவியவர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதன் மூலம் இந்நோய் பரவும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட உடனே முறையான சிகிச்சை பெறுவதன் மூலம் 4 வாரங்களில் நோய் பாதிப்பிலிருந்து மீண்டு விட முடியும் என்று சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் குரங்கு அம்மை கண்காணிப்பு பணி தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், விமான நிலையங்களில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. வெப்பநிலை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார்கள்.
தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை நோய் பாதிப்பில்லை. தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக தெரிவிக்க வேண்டும். பாகிஸ்தானில் ஒருவருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்படவுள்ளது. நோய்த் தொற்று குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு குரங்கம்மை நோய் தொற்றை சிறப்பாக கையாண்டு வருகிறது என்று தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications