அரசியலில் நிரந்தர எதிரி இல்லை.. கூட்டணிக்கு விஜய் அச்சாணி.. பேச்சால் சர்ச்சை.. அட அந்த கட்சியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை.. அரசிலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்திர எதிரியும் இல்லை.. அரசியல் களத்தில் யார், யாரை எதிர்ப்பார்கள் என்று எப்போதும் தெரியாது என்று தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவில் தலைவர் விஜய் பேசி உள்ளார். இதனால் எங்கே விஜய் அரசியல் கூட்டணிக்கு தயாராகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதலாம் ஆண்டு விழா நடந்து கொண்டு இருக்கிறது. இந்த விழாவில் பேசிய விஜய், மக்களுக்கு பிடித்துப் போன ஒருவர் அரசியலுக்கு வந்தால், சிலர் எதிர்க்கிறார்கள். என்னை எப்படி வீழ்த்தலாம் என சிலர் குழப்பத்தில் உள்ளனர்.

TVK Tamilaga Vettri Kazhagam Vijay

பணம் பணம் பணம் என பணத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டிருக்கும் பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவதே நம்முடைய முதல் வேலை. அண்ணா, எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது பின்னால் இருந்தவர்கள் இளைஞர்கள்தான்.

மக்களின் பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல் பணம் மட்டுமே குறியாக உள்ள பண்ணையார்களை அகற்ற வேண்டும். நாம் அரசியலுக்கு வந்தது ஒரு சிலருக்கு எரிச்சலை கொடுத்துள்ளது. விரைவில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த போகிறோம்.

அந்த காலத்துல பண்ணையார்கள் தான் பதவியில இருப்பாங்க. இப்ப பதவி இருக்கவங்க எல்லாம் பண்ணையாரா மாறிடுறாங்க. எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்; அது தனிப்பட்ட உரிமை. கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையை கேள்விக்குறியாக்கி வலுக்கட்டாயமாக திணித்தால் எப்படி BRO. எந்த பெரிய கட்சிக்கும் சளைத்தது அல்ல தவெக, விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்த உள்ளோம். தவெக பூத் கமிட்டி மாநாட்டுக்கு பிறகு எங்களின் பலம் அனைவருக்கும் தெரியும்.

வரும் 2026 தேர்தலில் தவெக புதிய வரலாறு படைக்கும். தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சியாக தவெக உருவெடுத்து வருகிறது. வரும் 2026 தேர்தலில் தவெக புதிய வரலாறு படைக்கும். 1967, 1977 சட்டமன்ற தேர்தல்களை போல புரட்சி நடக்கும்.

இங்கே எவ்வளவு சீரியஸாக ஒரு பிரச்னை நடந்துகொண்டிருக்கிறது? இவங்க ரெண்டு பேரும், அதாங்க ஃபாசிஸமும் பாயாசமும். நம்ம கொள்கை எதிரியும் அரசியல் எதிரியும் பேசி செட்டிங் செய்துகொண்டு சோஷியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். தினம் தினம் இதை சொல்லி சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

பாசிசமும், பாயாசமும் செட்டிங் வைத்து விளையாடுகிறார்கள்.. இதை எல்லாம் நாம் நம்ப வேண்டுமா? இவர்கள் அடித்துக் கொள்வதுபோல அடித்துக் கொள்வார்களாம்... மக்கள் அதை நம்பணுமாம்! What Bro? Its Very Wrong Bro... இதுக்கு இடையில நம்ம பசங்க.. உள்ளபோய் #TVKforTN என சம்பவம் செய்துவிட்டு வந்துவிட்டார்கள்! யார் சார் நீங்கள்லாம்? எங்க சார் இருக்கீங்க? ஸ்லீப்பர்செல்ஸ் மாதிரி"

மக்களுக்கு ரொம்போ ரொம்போ பிடிச்சுப்போன ஒருத்தன் அரசியலுக்கு வந்தா மக்களுக்கு பிடிக்கத்தானே செய்யும். அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை.. அரசிலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்திர எதிரியும் இல்லை.. அரசியல் களத்தில் யார், யாரை எதிர்ப்பார்கள் என்று எப்போதும் தெரியாது என்று தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவில் தலைவர் விஜய் பேசி உள்ளார். இதனால் எங்கே விஜய் அரசியல் கூட்டணிக்கு தயாராகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய் கூட்டணி:

பொதுவாக அரசியலில் கூட்டணி வைக்கும் அரசியல் தலைவர்களே.. அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை.. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்திர எதிரியும் இல்லை.. அரசியல் களத்தில் யார், யாரை எதிர்ப்பார்கள் என்று எப்போதும் தெரியாது என்றெல்லாம் பேசுவார்கள். ஆனால் விஜய் அதே கருத்தை இந்த முறை வைத்துள்ளார்.

அப்படி என்றால் விஜய் கூட்டணிக்கு ரெடியாகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் விஜய் கூட்டணி வைத்தால் யாருடன் வைப்பார். நிரந்தர எதிரி இல்லை என்பதால் திராவிட கட்சிகளுடனா? விசிக போன்ற திமுகவின் கூட்டணி கட்சிகளோடா? அல்லது கொள்கை எதிரி பாஜகவோடா? என்ற கேள்வி எழாமல் இல்லை.

அரசியலில் நிரந்தர எதிரி இல்லை என்ற விஜயின் இந்த பேச்சை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்ற உங்கள் கருத்தை கீழே கமெண்ட் செய்யுங்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+