Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓடிடியில் போணி ஆகாத லால்சலாம்! 1000கோடி வசூலே பொய்தான்! போட்டு உடைத்த பிரபலம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல படங்கள் 100 கோடி 1000 கோடி வசூல் என்று விளம்பரம் செய்வது உண்மையே இல்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

இது சினிமா திரையரங்கங்களுக்கு போதாத காலம்போல்தான் தெரிகிறது. தென் இந்தியாவின் முதல் தியேட்டரான கோவை டிலைட் தியேட்டர் மூடப்பட்டு விட்டது. அதனையடுத்து சென்னை அசோக் பில்லரின் அடையாளமான உதயம் தியேட்டரை இடிக்கும் வேலைகள் தொடங்கி உள்ளன.

There is no market for Lal Salam in the OTT

இப்படியே தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளின் எண்ணிக்கை வரவர குறைந்து கொண்டே வருகின்றன. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக மல்டிப்ளெக்ஸையும் சேர்த்து 10160 தியேட்டர்கள் உள்ளன. இதன் எண்ணிக்கை இன்னும் வரும் காலங்களில் குறையும் என்கிறார்கள் திரைத்துறையினர்.

ஒரு ஆண்டுக்கு 200 முதல் 300 தமிழ்ப் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. ஆனால், ஓடிடி கம்பெனிகள் மொத்தமாக 15 படங்களுக்குத்தான் பட்ஜெட்டே ஒதுக்குகிறார்கள். அதில் பெரும்பாலானவை பெரிய நடிகர்களின் படங்கள். மீதம் உள்ளவை 2ஆம் கட்ட நடிகர்களின் படங்கள். அங்கே சின்ன படங்களுக்கு இடமே இருப்பதில்லை.

தொடக்கக் காலத்தில், அதிக தொகையைக் கொடுத்து தியேட்டருக்கு படத்தைப் போகவிடாமல், தடுத்த ஓடிடி கம்பெனிகள் நிறையவே கையை சுட்டுக் கொண்டுவிட்டன. அதனால் இப்போது பொறுக்கி பொறுக்கிப் பார்த்து படங்களைத் தேர்வு செய்கிறார்கள்.

There is no market for Lal Salam in the OTT

ஆரம்பத்தில், இனிமேல் தியேட்டர் தயவே தேவை இல்லை எனக் கற்பனையில் மிதந்த பல தயாரிப்பாளர்கள் மீண்டும் தியேட்டர்களைவிட்டால் வேறு வழியில்லை என்று திரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

தியேட்டர்களுக்கு ஆட்களே வருவதில்லை என்று அதன் உரிமையாளர்கள் கண்ணீர் வடித்து வரும் காலத்தில், 600 கோடி வசூல், 1000 கோடி வசூல் என நடிகர்கள் கொடுக்கும் பில்ட் அப்புக்கு குறைச்சல் இல்லை.

'இந்தக் கலாச்சாரத்தை முதலில் சினிமாவில் தொடங்கி வைத்தவர் விஷால்தான். அவர் படங்கள் பல ப்ளாப். ஆனால், கவலையே படாமல் அவர் சென்னையில் பத்திரிகையாளர்களை அழைத்து சக்சஸ் மீட் நடத்துவார். இப்படிப் பல உருட்டுகளை அவர் உருட்டி உள்ளார்' என்கிறார் விஷால் கம்பெனியில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர் ஒருவர்.

There is no market for Lal Salam in the OTT

அவர் ஆரம்பித்து வைத்த இந்த 'உருட்டல்' கலாச்சாரத்தை இப்போது பல பெரிய நடிகர்களே செய்து வருகிறார்கள். குறிப்பாக ரஜினியின் லால்சலாம் மிகப் பெரிய அளவில் அடி. அந்தப் படத்தை ஓடிடியில் போணி செய்யப் பலவிதமாகப் போராடியும் விலை போகவில்லை என்கிறார் திரை விமர்சகர் ஒருவர்.

இந்தநிலையில்தான் 1000 கோடி வசூல் என்பதே பொய்யானது. அது எங்கள் மனசாட்சிக்குத் தெரியும் என்று உண்மையை வெட்டவெளியில் போட்டு உடைத்திருக்கிறார் தமிழ் நாடு தியேட்டர் அண்ட் மல்டிப்ளெக்ஸ் ஓனர் அசோசியேஷனை சேர்ந்த திருப்பூர் சுப்பிரமணியம்.

"சினிமா பார்க்கத் திரையரங்கத்திற்கு வருகின்ற மக்களின் எண்ணிக்கை கடந்த 4 மாதமாகக் குறைந்துகொண்டே வருகிறது. இதற்குக் காரணம் என்ன என்று கூட ஆராய்ந்தோம். இந்தியில் வெளியாகும் படங்களை அனைத்தையும் 56 நாள்கள் கழித்துத்தான் ஓடிடியில் வெளியிடுகிறார்கள்.

There is no market for Lal Salam in the OTT

ஆனால், தமிழ்நாட்டில் அப்படி இல்லை. திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் சினிமா தயாரிப்பாளர்கள் இடையே உள்ள நல்லுறவு அடிப்படையில் ஒரு படம் வெளிவந்த பிறகு, 4 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிட்டு வருகிறோம்.

ஆனால், அப்படி வெளியிடுவதால்தான் தியேட்டருக்கு மக்கள் வருவதில்லை என்பதை இப்போது உணர்ந்து கொண்டுள்ளோம். குறிப்பாகச் சின்ன படங்களை ஓடிடியிலேயே மக்கள் பார்த்துவிடுகிறார்கள்.

முன்பு படம் திரைக்கு வருவதற்கு முன்னதாகவே ஓடிடி தளங்கள் படங்களை விலைபேசி வாங்கி வந்தார்கள். இப்போது அந்தநிலை மாறி உள்ளது. முதலில் விலைபேசி தியேட்டரில் விற்று பிறகே வாங்குகிறார்கள். அப்படிப் பார்த்தால் ஓடிடி நிறுவனங்கள் தரப்பிலும் சில பாதிப்புகள் இருக்கின்றன.

There is no market for Lal Salam in the OTT

எனவே யாருக்கு நஷ்டம் ஏற்படாமல் இருப்பதற்காக வேண்டி, ஓடிடி ரிலீஸ் என்பதைப் படம் வெளியாகி 8 வாரங்கள் கழித்த பிறகே வெளியிட வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளோம்" என்கிறார்.

சிறிய படங்களுக்கு அதிகபட்சம் 100 ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பாரதிராஜா கூட அவர் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்திருந்தார். அதையும் விரைவில் நடைமுறை செய்ய உள்ளோம் என்கிறார் சுப்பிரமணியம்.

தொடர்ந்து பேசிய அவர், "சின்ன படங்கள் ஒரு ஆண்டுக்கு 190 படங்கள் வருகின்றன. இந்தச் சின்ன படங்களில் குறைந்தது 150 படங்கள் படம் எடுப்பதற்கான எந்தவித அனுபவமும் இல்லாதவர்களால் எடுக்கப்பட்டது. அதில், நடித்துள்ளவர்கள் யார் என்பதே தெரியாத அளவுக்கு உள்ளவை. மேலும் அதன் கண்டெண்ட் என்பதே தரமற்றதாக உள்ளது.

There is no market for Lal Salam in the OTT

ஓடிடி முதலில் அறிமுகமாகும் போது ரிலீஸ் ஆவதற்கு முன்பே படங்களை விலை பேசி வாங்கினார்கள். ஆனால், இப்போது அப்படி இல்லை. அவர்களுக்குத் தேவையான அறிமுகம் கிடைத்துவிட்டது.

ஓடிடியில் பார்க்கத் தேவையான ஆடியன்ஸ் கிடைத்துவிட்டார்கள். அதனால், இப்போது தியேட்டரில் ரிலீஸ் ஆன பிறகு வாங்க ஆரம்பித்துள்ளார்கள். அதை அதிகாரப்பூர்வமாகவே தயாரிப்பாளர்களுக்குத் தெரிவித்துவிட்டார்கள்.

தியேட்டரில் அந்தப் படத்தின் செல்வாக்கு எந்தளவுக்கு உள்ளது என்பது நிரூபணம் ஆன பிறகு, அதற்கு விலை பேசத் தொடங்கி உள்ளனர். இது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் அடி. ஏறக்குறைய ஓடிடி என்பது மெகா பட்ஜெட் படங்களின் சந்தையாகவே இருந்து வருகிறது" என்றவர் இறுதியாக 1000 கோடி வசூல் பற்றி சில விளக்கங்களை அளித்தார்.

There is no market for Lal Salam in the OTT

"எதையும் மிகைப்படுத்திச் சொல்வதுதான் சினிமா. சில நடிகர்கள் அதிக வசூல் என விளம்பரப்படுத்தினால் மக்கள் படம் பார்க்க வருவார்கள் என நம்புகிறார்கள். அது ஒரு விளம்பர யுக்தி.

எங்களிடம் அனைத்து தியேட்டர்களிலும் ஒரு படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்ற டேட்டா இல்லை. ஆனால், பல படங்களைப் பார்க்க ஆட்களே வருவதில்லை. தியேட்டரில் ஆளே இல்லை. அதிக வசூல் என்று சக்சஸ் மீட்டில் சொல்கிறார்கள். அது உண்மை இல்லை என்பது எங்கள் மனசாட்சிக்குத் தெரியும்" என்கிறார்

There is no market for Lal Salam in the OTT
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+