இந்த தேர்தலில்.. திமுகவிலிருந்து ஒரு நாடார் எம்.பி. கூட வரப்போவதில்லை! பின்னணி இதுதான்!
சென்னை: தென் மாவட்டங்களில் உள்ள கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி ஆகிய ஐந்து தொகுதிகளின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக நாடார் சமூகத்தினர் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த முறை இந்த பகுதியில் இருந்து திமுக சார்பாக ஒரு நாடார் எம்பி வர வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திருநெல்வேலியை ஒட்டியுள்ள தென் மாவட்டங்களை பொறுத்தவரை திமுக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி கன்னியாகுமரி மற்றும் விருதுநகரில் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை திருநெல்வேலி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்துள்ளது. நாடார்கள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ள கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர் ஆகிய 3 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கொடுத்துள்ளது.. தூத்துக்குடி, தென்காசியில் மட்டும் தான் திமுக நேரடியாக போட்டியிடுகிறது.

தென்மாவட்டத்தில் மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதியையுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுத்துள்ளது.. ராமநாதபுரத்தை முஸ்லீம் லீக்கிற்கு திமுக கொடுத்துள்ளது. சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. ஒட்டுமொத்தமாக தென்மாவட்டங்கள் என்று பார்த்தால் தூத்துக்குடி, தென்காசி, தேனி ஆகிய 3 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
தென் மாவட்டங்களில் உள்ள கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி ஆகிய ஐந்து தொகுதிகளை வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக நாடார்கள் உள்ளனர். இதில் தென்காசி தவிர்த்த பிற தொகுதிகள் பொதுத் தொகுதிகள். எனவே எப்போதுமே அனைத்து பெரிய கட்சிகளும் நாடார் வேட்பாளர்களையே நிறுத்துவது வழக்கம். தூத்துக்குடியில் கனிமொழி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளர்.
அதேபோல் தென்காசி தனி தொகுதி என்பதால் அங்கும் நாடார் வேட்பாளர் இல்லை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகரில் காங்கிரஸ் போட்டி என்பதால் திமுக சார்பில் இந்த முறை தென்மாவட்டத்தில் நாடார் எம்பி இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
தென்மாவட்டங்களில் தங்களால் எளிதாக ஜெயிக்க முடியும் என்கிற தொகுதிகளை எல்லாம் இந்த முறை திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாரி வழங்கி உள்ளதாம். கூட்டணி கட்சிகளுக்கு சவாலான அதேநேரம் அதிமுக அல்லது பாஜகவின் பெரிய கைகள் மோதும் இடங்களில் எல்லாம் திமுகவே நேரடியாக களம் இறங்கி உள்ளது. இந்த முறை புதுசேரி உள்பட 40 தொகுதியிலும் திமுக கூட்டணி வெல்ல வேண்டும் என்று விரும்பிய ஸ்டாலின், அதற்காகவே இப்படி சவாலான இடங்களில் எல்லாம் திமுகவை களம் இறக்கி உள்ளாராம்..












Click it and Unblock the Notifications