மேஜிக்.. இரவு முழுக்க சென்னையை புரட்டி எடுத்த மழை.. தண்ணீரே தேங்கவில்லையே.. அதிசயம்!
சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தும் பெரும்பாலும் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை என்பதால் மக்கள் வியப்பில் ஆழ்ந்து உள்ளனர்.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பகல் முழுக்க வெயில் அடித்தாலும் இரவு நேரங்களில் கனமழை பிச்சு எடுக்கிறது. இரவு 9 மணிக்கு தொடங்கும் வெயில் விடாமல் நள்ளிரவு வரை தொடருகிறது.

இந்த கனமழை மேலும் 5 நாட்களுக்கு தொடரும் என்றும் சென்னை வானிலை மையம். இரவு நேரத்தில் வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் மிக கனமழை மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் விடாமல் பெய்யும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
ஆனால் சென்னையில் இரவு முழுக்க கனமழை பெய்தும் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. அசோக் நகர், வடபழனி, அண்ணாசாலை, ஆழ்வார்பேட்டை பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தும் தண்ணீர் தேங்கவில்லை. மழை காரணமாக பெரிதாக சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கவில்லை.
தண்ணீர் இல்லை: சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பெரிதாக தண்ணீர் தேங்கவில்லை. பொதுவாக சென்னையில் 1 மணி நேரம் மழை பெய்தாலே சாலை வெள்ளக்காடு போல காட்சி அளிக்கும். மெரினா பீச் நடந்து வந்து சிட்டிக்கு உள்ளே டென்ட் போட்டது போல வெள்ளக்காடாக காட்சி அளிக்கும்.
முக்கியமாக வடகிழக்கு பருவமழை தொடங்கினால் தினசரி சாலைகளில் வெள்ளத்தை பார்க்க முடியும். அதிலும் டிசம்பர் மாதங்களில் சாலைகளில் ஸ்விம்மிங் அடிக்கும் நிலை ஒவ்வொரு வருடமும் ஏற்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை அப்படி தண்ணீர் தேங்கவில்லை.
சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. வெள்ளம் இல்லை: இரவில் இருந்து இவ்வளவு மழை பெய்தும் சென்னையில் எங்கும் வெள்ளம் ஏற்படவில்லை. சென்னை சிட்டிக்கு உள்ளே வளசரவாக்கம், கத்திப்பாரா உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே மட்டுமே தண்ணீர் தேங்கியது.
தண்ணீர் தேங்கும் இடங்களிலும் வேகமாக தண்ணீர் வடிந்து உள்ளது. ஆனால் புறநகர் பகுதிகளில் தண்ணீர் வேகமாக வடியவில்லை. புறநகர் பகுதிகளில் வேகமாக வெள்ளம் வடியாமல் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. சென்னையில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. அங்கு எல்லாம் இன்னும் வெள்ள நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. அங்குதான் மோட்டார் போட்டு தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடக்கின்றன
சென்னையில் கத்திப்பாரா பாலம், தி நகரில் உள்ள சில பகுதிகள், நந்தனம் அருகே சில பகுதிகள், மீனம்பாக்கத்தில் சில தெருக்களில் தண்ணீர் தேங்கியது. மற்ற இடங்களில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. எழும்பூர், ஆவடி, வேளச்சேரி பகுதிகளில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை.
வடிகால் வசதி: முன்னதாக சென்னையில் வெள்ள நீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதாவது சாலைகளின் ஓரம் வெள்ள நீர் வெளியேறுவதற்காக மிகப்பெரிய அளவில் குழாய்கள் அமைக்கப்படும். ஆறுகளில் கலக்கும் வகையில் சென்னை முழுக்க இதற்காக குழாய்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக சென்னையில் எல்லா சாலைகளிலும் குழி தோண்டப்பட்டது. சாலை ஓரங்களில் குழி தோண்டி பணிகளை செய்து வந்தனர். இது மக்களுக்கு கடுமையான இடைஞ்சல்களை ஏற்படுத்தியது. இருந்தாலும் மழை வெள்ளத்தை தடுக்கும் என்பதால் தொடர்ந்து பணிகள் நடந்தன.
பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதியை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் கடந்த வருடம் சென்னையில் வெள்ளம் ஏற்படவில்லை. அதேபோல் இந்த வருடமும் சென்னை மழைக்கு இடையே பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்படவில்லை.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications