கொடநாடு கொலையில் சசிகலா குடும்பத்திற்கு தொடர்பு.. போயஸ் தோட்டத்தில் பரபரப்பு கிளப்பிய ஜெ.தீபா
சென்னை: கொடநாடு கொலையில் சசிகலா குடும்பத்திற்கு தொடர்பு உள்ளது என ஜெ.தீபா பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அண்ணன் மகளான ஜெ.தீபா தேசியக் கொடி ஏற்ற சென்றார். அப்போது அங்கு கொடியேற்றக்கூடாது என தீபக் தகராறு செய்துள்ளார்.

இதையடுத்து சிறிது நேர சலசலப்புக்கு பிறகு தீபா தேசியக் கொடியை ஏற்றினார். இதையடுத்து தீபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வேதா இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்ற எனது சகோதரர் தீபக் தடுக்கிறார்.
எனது அத்தை வாழ்ந்த வீட்டில் மரியாதை செலுத்தும் விதமாகத்தான் இந்த கொடியேற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தேன். இந்தியாவின் குடிமகளாக கொடியேற்றுவது நமது கடமை என நினைக்கிறேன். ஆனால் எனது தீபக் இந்த வீட்டுக்குள்ளேயே வரக் கூடாது, கொடியேற்றக் கூடாது என என்னை தடுக்கிறார். அவர் இது போல் தடுப்பது முதல்முறையல்ல.
பல முறை நான் அத்தை வீட்டுக்குள் செல்ல முயற்சிக்கும் போதெல்லாம் இது போல் நடந்துள்ளது. அத்தையின் பிறந்தநாளை கூட போயஸ் தோட்டத்தில் கொண்டாடக் கூடாது என என்னை தடுத்துக் கொண்டே இருக்கிறார். நான் போயஸ் தோட்டத்திற்கு வருவதற்கே இத்தனை தொந்தரவு செய்கிறார்.
இந்த வீட்டில் 2 பேருக்கும் உரிமை உள்ளது. நானே விரும்பினாலும் தனிப்பட்ட முறையில் என்னால் எந்த முடிவுகளும் எடுக்க முடியாமல் உள்ளது. இந்த வீட்டில் பராமரிப்பு பணிகளை கூட செய்ய முடியாத நிலை உள்ளது. கொடநாடு கொலை வழக்கில் சசிகலா குடும்பத்திற்கு தொடர்பு உள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில் அத்தை ஜெயலலிதா தங்குவார். ஆனால் அந்த இடத்தின் முழு கட்டுப்பாடும் முழுவதும் சசிகலா குடும்பத்தினரிடம்தான் உள்ளது. அவர்களுடைய தூண்டுதலின் பேரில் இந்த கொலை, கொள்ளை சம்பவம் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
கொடநாடு கொலை சம்பவம் இப்போது நடக்கவில்லை. இது அதிமுக ஆட்சியில் நடைபெற்றது. அப்போது இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடநாடு விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தார். ஒன்றும் எடுக்கவில்லை. இதில் அவருக்கே கூட தொடர்பு இருப்பதாக சில சந்தேகங்கள் கூறப்படுகிறது. விசாரணையை துரிதப்படுத்தினால் உண்மைகள் வரும். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆனால் பூனை சூடு போட்டுக் கொண்டால் புலி ஆகிவிடாது. அவருக்கு கீழ் தான் அதிமுக செயல்பட வேண்டும் என்பது தொண்டர்களின் தலையெழுத்து என்றார்.
2017 ஆம் ஆண்டு கொடநாட்டில் இருந்த காவலர் பகதூர் சிங் கொல்லப்பட்டு அங்கு கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு என்னென்ன கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications