பெரியார், காமராஜர், அண்ணா "வழிவிட".. தீவுத்திடலில் விஜயகாந்துக்கு தேமுதிக தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி
சென்னை: விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த ஏதுவாக பெரியார், காமராஜர், அண்ணா சாலைகளில் சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் வஜயகாந்த் நேற்றைய தினம் காலை 6.10 மணிக்கு காலமானார். அவருடைய உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு காலை முதலே மக்கள், தொண்டர்கள் சாரை, சாரையாக அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

நேற்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவருடைய உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று முக்கியஸ்தர்கள் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வருவார்கள் என்பதால் தீவுத்திடலை சுற்றியுள்ள சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு போக்குவரத்து மாற்றப்பட்டது.
கோயம்பேட்டிலும் போக்குவரத்து மாற்றப்பட்ட போதிலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் தீவுத்திடல் அதனை சுற்றியுள்ள பகுதிகள்ஸ காமராஜர் சாலை, கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு, 100 அடி சாலை ஆகிய பகுதிகளில் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியூரில் இருந்து வருவோரின் வாகனங்களை மெரினா கடற்கரை. பல்லவன் சாலையில் நிறுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. அதாவது தீவுத்திடலை சுற்றி ஈவெரா சாலை, காமராஜர் சாலை, அண்ணா சாலை ஆகியவை உள்ளன. இந்த சாலைகளில் சரக்கு வாகனங்களுக்கு தடை செய்யப்பட்டதால் தொண்டர்கள் எளிமையாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முகத்தை பார்த்து வருகிறார்கள்.
அது போல் போக்குவரத்து காவல் துறை மற்றொரு அறிவிப்பையும் விடுத்துள்ளது. அதில் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் தீவுத்திடல் வழியே செல்ல வேண்டாம். அனைத்து விஐபி, விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவு சின்னம் வழியாக தீவுத்திடல் மைதானத்தில் இடது நுழைவு வாயில் வழியாக செல்லலாம்.
மூத்த கலைஞர்களழின் வாகனங்கள் பல்லவன் முனை மற்றும் வாலாஜா முனை (அண்ணா சாலை, கொடி மரச்சாலை சந்திப்பு) வரை அனுமதிக்கப்படும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கட்சித் தொண்டர்களின் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் (போக்குவரத்து பேருந்துகள் மற்றும் மேக்சி கேப்கள்) அண்ணா சாலை வரை அனுமதிக்கப்படும். அது போல் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்படும்.
அண்ணா சாலை, காமராஜர் சாலை, கோயம்பேடு மற்றும் கோயம்பேடு மேம்பாலத்தில் வர்த்தக வாகனங்களுக்கு அனுமதி இல்லை, இரு சக்கர வாகன ஓட்டிகள், இலகுரக வாகனங்கள் பெரியார் சிலை, சுவாமி சிவானந்த சாலை, எம்எல்ஏ விடுதி வழியே அனுமதிக்கப்படுவர் என காவல் துறை தெரிவித்துள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications