சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் இன்றுடன் முதல் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் அதேநேரம் பல்வேறு பகுதிகளில் நாளை மறுநாள் சூறை காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். அதேநேரம் வெயிலின் கொடுமையும் கடுமையாக இருக்கிறது. கடந்த சில வாரங்களாக வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. எனினும் இந்த கோடை மழை தமிழகத்துக்கு போதவில்லை.

Thermal wind will blow in many part of Tamil Nadu at next 3 days

இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அனல்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

ஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்! ஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்!

அதேநேரம் வெப்பச்சலனம் காரணாக நாளை மறுநாள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறை காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருத்தணியில் 107 டிகிரி பாரன்ஹீட்டும், திருச்சி மற்றும் மதுரையில் 105 டிகிரி பாரன்ஹீட்டும், நெல்லையில் 103 டிகிரி பாரன்ஹீட்டும், கோவையில் 97 டிகிரி பாரன்ஹீட்டும், தலைநகர் சென்னையில் 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது.

English summary
Thermal wind will blow in many part of Tamil Nadu at next 3 days, rain may lashed after two days
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X