ரூ 1000 மகளிர் உரிமைத் தொகை பெற.. "இந்த" 2 பேப்பர்+ 4 டாக்குமென்ட்கள் இருந்தால் போதும்!
சென்னை: ரூ 1000 மகளிர் உதவித்தொகையை பெற உங்கள் கையில் இருக்க வேண்டிய 6 டாக்குமென்ட்கள் என்னென்ன தெரியுமா?
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான ரூ 1000 மகளிர் உதவித்தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெறலாம் என்பது குறித்து அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை வகுத்தது.
அதன்படி ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மேல் இருக்கும் மகளிர்கள், அரசு ஊழியர்கள், பெண் எம்எல்ஏக்கள், சொந்த வீடு, நிலம், வாகனங்கள் இருப்போர், வருமான வரி செலுத்தும் பெண்கள், 3600 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தும் பெண்கள் உள்ளிட்டோர் இந்த திட்டத்திற்கு பயனாளிகளாக கருதப்பட மாட்டார்கள்.

இந்த நிலையில் இந்த திட்டத்தில் பயனாளிகளை அரசே தேர்வு செய்கிறது. இதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கனையும் விண்ணப்பங்களையும் அளிக்கும் பணி நேற்று முன் தினம் முதல் தொடங்கியது. அதன்படி டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியன்று அந்த நேரத்தில் பெண்கள், மகளிர் உதவித் தொகை முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.
டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் செல்லும் பெண்கள் எந்தமாதிரியான ஆவணங்கள் கொண்டு செல்லலாம் என்பதை பார்ப்போம். பயனாளி வரும் போது டோக்கனையும் விண்ணப்பத்தையும் கொண்டு வந்தால் போதும். வருமான சான்றிதழ், மின் அட்டை உள்ளிட்ட வேறு எதையும் கொண்டு வர தேவையில்லை.

டோக்கன், விண்ணப்பங்கள் மட்டுமல்லாமல் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகிய 4 அடிப்படை ஆவணங்களை கொண்டு வரவேண்டும். எனவே இந்த 4 ஆவணங்கள், டோக்கன், விண்ணப்பம் ஆகிய 6 தாள்களுடன் பயனாளிகள் வந்தால் போதும். ஆதார் எண், வங்கிக் கணக்கு எண இல்லாவிட்டால் அதை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்கிறது.
எனவே தகுதியுடைய பெண்களுக்கு ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் ஆவணங்கள் ரெடி செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ 1000 வழங்கும். ஏற்கெனவே இலவச பஸ் பயணம் மூலம் பெண்களுக்கு ரூ 1000 மிச்சமாகிறது என்கிறார்கள். அந்த வகையில் மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகை என்பது நிச்சயம் அந்த பெண்களின் குடும்பத்தின் வாழ்வாதாரம் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications