”மலஹாசன்” என்கிறார்கள்.. நான் அள்ளுவேன் ஆனால்.. திருமா நிகழ்ச்சியில் ஆவேசமாக பேசிய கமல்ஹாசன்
சென்னை: "எங்கிட்ட மலஹாசன் என்று சொன்னால் எனக்கு சந்தோஷம்.. எங்க தாத்தா அதை அள்ளுவார் நானும் சேர்ந்து அள்ளுவேன். ஆனால், உனக்காக அள்ள மாட்டேன். எனக்காக அள்ளுவேன்" என்று சென்னையில் நடந்த தொல் திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கூறினார். மேலும், என்னுடைய சாதியை சொல்லி என்னை கிண்டல் செய்வார்கள். எனவே, சாதி தான் எனது முதல் எதிரி என்றும் கமல்ஹாசன் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழா, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்து. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

கமல்ஹாசன் பேச்சு
திருமாவளவனின் 40 ஆண்டுகால அரசியல் வாழ்வு சாதாரணமானது கிடையாது. அதில் பல தழும்புகள் இருக்கின்றன. சாதி பிரிவினைகள் தான் இந்தியாவின் பலவீனமாக உள்ளது. சாதியை நீக்கினால் தான் நாம் ஒரே தேசமாக, ஒரே மக்களாக இணைய முடியும். ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல்மயப்படுத்துவது எளிதான காரியம் அல்ல. அவர்களை அரசியல் மயப்படுத்தும் நபர்கள் அற்புதமானவர்கள். அவர்கள் அடிக்கடி வரமாட்டார்கள்.
அவர்கள் களத்திற்கு வரும்போது நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு கட்சியை ஆரம்பித்து அங்கீகாரம் வாங்குவது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு தெரியும். அரசியலில் அரசியல் வேண்டுமா, ஆதாயம் வேண்டுமா என கேட்டால் திருமாவளவன் அரசியலைத் தான் தேர்ந்தெடுக்கிறார். அவரைக் கண்டு நான் வியக்கிறேன். கட்சி ஆரம்பித்து நடத்துவது எவ்வளவு கஷ்டம் என்பது அதை ஆரம்பித்த எனக்கு தெரியும்.
என்னுடைய எதிரி யார்
என்னுடைய சாதியை சொல்லி என்னை கிண்டல் செய்வார்கள். எனவே, சாதி தான் எனது முதல் எதிரி. என்னுடைய எதிரி யார் என்று கேட்பவர்களிடம் இதை தான் நான் பதிலாக சொல்கிறேன். பிறப்பினால் நாம் யாருக்கும் தாழ்ந்தவர் கிடையாது. நம்மை விட யாரும் உயர்ந்தவரும் இல்லை. நான் மய்யத்தில் இருப்பதால் இந்த புயல் எங்கெங்கே வீசுகிறது என்று என்னால் பார்க்க முடிகிறது.
என்னை மலஹாசன் என்று சொல்றாங்க
இங்கே காற்று அடிக்காது. அதான் சொல்கிறார்களே.. மலஹாசன் என்று. மலத்தை என்கிட்ட பேசாத.. மலம் என்றால் என் தாத்தா காந்தியிடம் கேள்.. அள்ளுவார்.. கல்கத்தாவில் 1908-ல் நடந்த நிகழ்ச்சியின் போது காங்கிரஸ் கட்சியினர் எல்லாம் சாப்பிட்டுட்டு அங்கே போய் செய்ய வேண்டியதை செய்தார்கள். காந்தியடிகள் அதை சுத்தம் செய்துவிட்டுத்தான் காலை உணவையே சாப்பிடுவார்.
நானும் சேர்ந்து அள்ளுவேன்
என்கிட்ட மலஹாசன் என்று சொன்னால் சந்தோஷம்.. சபாஷ் நான் தன் அது.. எங்க தாத்தா அதை அள்ளுவார் நானும் சேர்ந்து அள்ளுவேன். ஆனால், உனக்காக அள்ள மாட்டேன். எனக்காக அள்ளுவேன். ஏனென்றால் கேலி நீங்கள்தானே பண்ணுறீங்க.. அதனால் என்னை நீ கூப்பிடு.. கோபம் எல்லாம் இல்லை. புரிய வைக்கிறேன். நான் பிள்ளைகளை கூட அடித்தது இல்லை.
சண்டை போடலாம், கத்தலாம் ஆனால் அடிக்க கூடாது. அதை புரிந்த இன்னொரு சகோதரர் திருமாவளவன் தான். இவருக்கு பிறந்தநாள் சொல்வது கடமையாக இருந்தது. இன்னொரு பெரிய விழா.. சேலத்தில் நடக்கிறது. அதற்கு நான் போக வேண்டும் என்று கனவு கண்டு கொண்டு இருந்தேன். ஆனால் இங்கு வருவது தேவை.. இந்த மேடையை நான் ஆச்சர்யமாக பார்த்தேன்" என்று பேசினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications